December 1, 2025
#தூத்துக்குடி

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோருக்கு தூத்துக்குடி காங்கிரஸ் அஞ்சலி

தூத்துக்குடி;கரூரில் நேற்று நடந்த துயரமான கூட்ட நெரிசலில் பலர் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் உலுக்கியுள்ளது. இதை அடுத்து, உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சி. எஸ். முரளிதரன் தலைமை வகித்தார். மண்டல தலைவர்கள் சேகர், ராஜன், ஐசன் சில்வா, செந்தூரப்பாண்டி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

இந்த துயர தருணத்தில், “உயிரிழந்தோர் ஆன்மா சாந்தியடையவும், அவர்களின் குடும்பத்தாருக்கு கடவுள் வலிமை அருளவும்” எனக் கலந்து கொண்டோர் அனுதாபம் தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில் ஐஎன்டியூசி தமிழ்நாடு தொழிற்சங்க மாநில செயற்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், விவசாய பிரிவு தலைவர் பாலசுப்பிரமணியன், இளைஞர் காங்கிரஸ் தலைவர் மரிய ஆல்வின், சிறுபான்மை பிரிவு தலைவர் மைதீன், ஊடகப் பிரிவு தலைவர் ஜான் சாமுவேல், மாநில செயலாளர் முத்துமணி, மகளிர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் முத்து விஜயா, மாநில செயற்குழு உறுப்பினர் சாந்தி மேரி, மாவட்ட துணைத் தலைவர்கள் ஏ.டி. பிரபாகரன், மார்க்கஸ், அருணாச்சலம், பொதுச்செயலாளர் மைக்கில் பிரபாகர், செயலாளர்கள் கோபால், அந்தோணி ஜெயராஜ், வார்டு தலைவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.