December 1, 2025
#தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகரம் மழையை சமாளிக்கத் தயாராகியுள்ளது – மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்

தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில், மாநகராட்சி ஆணையர் பிரியங்கா முன்னிலையில் நடைபெற்றது.

இந்த முகாமில் பேசுகையில் மேயர் ஜெகன் பெரியசாமி கூறியதாவது:

“மழைக்காலத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி முழுமையாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சில பகுதிகளில் நீர் தேங்கும் பிரச்சனை ஏற்பட்டது. அதனைத் தீர்க்கும் முயற்சியாக அனைத்து தாழ்வான பகுதிகளிலும் வடிகால்கள் சுத்தம் செய்யப்பட்டு, நீர் தேங்காத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, இம்முறை எவ்வளவு பெரிய மழை பெய்தாலும் அதனை சமாளிக்க மாநகராட்சி முழுமையாக தயார் நிலையில் உள்ளது,” என்றார்.

இந்நிகழ்ச்சியில் வடக்கு மண்டல பகுதி கழக செயலாளர் மற்றும் மண்டலத் தலைவர் தொ. நிர்மல்ராஜ், மாமன்ற உறுப்பினர்கள் ரெங்கசாமி, காந்திமதி, ஜெயசீலி, கற்பககனி, பவானி, தெய்வேந்திரன், அந்தோணி, மார்ஷலின் நாகேஸ்வரி, ஜெபஸ்டின் சுதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.