December 1, 2025
#தூத்துக்குடி

இளைஞர்கள், மாணவர்கள் ஆர்வம் காட்டும் தூத்துக்குடி புத்தகத் திருவிழா – இரண்டாம் நாள் சிறப்பு

“தொடர்ந்து படி” எனும் வாசகத்துடன் சிறப்பாக நடைபெற்று வருகிறது


தூத்துக்குடி நகரில் 6-வது புத்தகத் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. “தொடர்ந்து படி” என்ற வாசகத்தை முன்னிலையாகக் கொண்டு நடத்தப்பட்டுள்ள இந்த விழா  வரும் 31-ம் தேதி வரை திருவிழா நடைபெற உள்ளது.

இந்த விழாவில் பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு புத்தகங்களை வாங்கி வருகின்றனர். சிறுவர் முதல் முதியோர் வரை அனைவருக்குமான பல்வேறு வகை நூல்கள் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக அறிவியல், தொழில்நுட்பம், வரலாறு, இலக்கியம், குழந்தைகள் கதைகள், சுய முன்னேற்றம் போன்ற நூல்கள் வாசகர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்துள்ளன.

இளைஞர்களின் ஆர்வம்: இந்த திருவிழாவில் இளைஞர்கள் பெருமளவில் பங்கேற்று வரலாற்று நூல்கள் மற்றும் மோட்டிவேஷன் (ஊக்கமளிக்கும்) நூல்கள் வாங்கி செல்வது குறிப்பிடத்தக்கதாகும். வாசிப்பு பழக்கம் வாழ்க்கையை முன்னேற்றும் சக்தி என்பதில் இளைஞர்கள் அதிக ஈர்ப்புடன் காணப்படுகின்றனர்.

விழாவில் பேசிய கல்வியாளர்கள், புத்தக வாசிப்பின் அவசியத்தை வலியுறுத்தினர். அவர்கள் கூறியதாவது:

 

இரண்டாவதுநாள்நிகழ்வில்இன்று(24.08.2025) கவிஞர்சுகுமாரன்“நிலைவளர்ந்துமுன்னேறு”என்றதலைப்பில் சிறப்புரைநிகழ்த்தினார்.
  • புத்தகம் படிப்பது மனிதனின் சிந்தனை திறனை விரிவாக்குகிறது.
  • குழந்தைகளின் மொழி அறிவு, கற்பனை சக்தி மற்றும் ஆளுமை வளர்ச்சிக்கு புத்தகம் உதவுகிறது.
  • இணையம் மற்றும் கைப்பேசி உலகில் மாணவர்கள் அதிகம் மூழ்கிக் கிடக்கும் இக்காலத்தில், புத்தகம் மட்டுமே மனதை நிலைநிறுத்தும் சக்தி கொண்டது.
  • தினமும் சிறிது நேரம் படிக்கும் பழக்கம் வாழ்க்கையை மாற்றும் சக்தி வாய்ந்தது

இந்த விழாவில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் இணைந்து புத்தகங்களை வாங்கிச் செல்வது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. “குழந்தைகள் புத்தகத்தைப் படிக்கத் தொடங்குவதற்கு பெற்றோரின் முன்னுதாரணமே காரணம்” என்ற செய்தியை இந்த நிகழ்வு வெளிப்படுத்தியது. நடைபெற்று வரும் இந்த 6-வது புத்தகத் திருவிழா, வாசகர்கள் மனதில் புத்தகத்தின் முக்கியத்துவத்தை மீண்டும் நினைவூட்டுகிறது. “தொடர்ந்து படி” என்ற வாசகம், குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை அனைவருக்கும் ஒரு ஊக்க வாசகமாக பரவியுள்ளது. புத்தக வாசிப்பு வழியாக அறிவார்ந்த சமூகத்தை உருவாக்கும் முயற்சியாக இந்த விழா சிறப்பாக அமைகிறது.

.