December 1, 2025
#தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடி 3வதுநிலை நெய்தல் கலை விழா – உணவுத் திருவிழா நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு. கனிமொழி கருணாநிதி அவர்கள் முன்னெடுப்பில் 2வது நாள் உற்சாக கொண்டாட்டம்

By I.ASHOKKUMAR 

இரண்டாம் நாளான இன்று (12/10/2024) தொடக்க நிகழ்ச்சியாகத் தூத்துக்குடி இசைப் பள்ளி கலை நிகழ்ச்சி, தூத்துக்குடி ஜெகஜீவன் தமிழன்டா கலைக்குழு, தூத்துக்குடி ஆண்டோ நெய்தல் கலைக்குழு, மகாமுனி சக்கைக்குச்சி ஆட்டம், ராமர் தப்பாட்டம் கலைக்குழு, காரமடை துடும்பாட்டம், ஸ்டாக்கட்டோ இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் குடும்பங்களுடன் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகளைக் கண்டு மகிழ்ந்தனர்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலம் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் மதுபாலன், தூத்துக்குடி மாநகராட்சி துணை மேயர் ஜெனிட்டா உள்ளிட்ட பலர் நெய்தல் கலை விழாவைக் கண்டு மகிழ்ந்தனர்.

நெய்தல் திருவிழாவின் ஒரு பகுதியாகத் தமிழர்களின் பாரம்பரிய உணவுகள், தமிழ்நாட்டின் பல பகுதிகளின் தனித்துவமான உணவுகள் எனப் பலவகையான உணவுகளை மக்கள் உண்டு மகிழும் வகையில் 50க்கும் மேற்பட்ட அரங்குகள் உள்ளது. மேலும், நபார்டு சார்பாக 60 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது, அதில் தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் தயாரிக்கப்படும் கைவினை பொருட்கள், கைத்தறி பொருட்கள், சிறுதானியங்கள் மூலம் செய்யப்பட்டுள்ள உணவுப் பொருட்கள், இயற்கை வேளாண் பொருட்கள் போன்ற தயாரிப்பு பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

நெய்தல் கலைத் திருவிழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 300க்கும்- மேற்பட்ட நாட்டுப்புறக் கலைஞர்கள் தங்களது கலை திறமைகளை வெளிப்படுத்த உள்ளனர். இந்த கலை திருவிழா மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறுகிறது. விழா திடலில் ரங்க ராட்டினம், பரமபதம், உறியடி உள்ளிட்ட பல பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளது.