தூத்துக்குடி 1வது ரெயில்வே கேட்டில் இன்று இரவு முதல் நாளை காலை வரை அவசர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள ரயில்வே நிர்வாகம் திட்டமிடப்பட்டுள்ளது.;ன
தெற்கு ரெயில்வே வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தூத்துக்குடியில் மட்டக்கடை மற்றும் டபிள்யூஜிசி சாலையை இணைக்கும் 1வது ரெயில்வே கேட்டில் அவசர பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று (9.8.2025, சனிக்கிழமை) இரவு 10.30 மணி முதல் நாளை (10.8.2025, ஞாயிற்றுக்கிழமை) காலை 5.00 மணி வரை மூடப்படும். எனவே வான ஓட்டிகள் சாலை போக்குவரத்துக்கு மாற்று வழிச்சாலையை பயன்படுத்திக் கொள்ளுமாறு இரயில்வே துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

