December 1, 2025
#தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடி மேலசண்முகபுரம் முனியசாமி கோவிலில் கொடைவிழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

தூத்துக்குடி மேலசண்முகபுரம் முனியசாமி கோவிலில் கொடை விழாவை முன்னிட்டு 301 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

மேலசண்முகபுரம் முனியசாமி கோவிலில் 26ம் தேதி கால்நட்டு விழாவுடன் கொடை விழா ஆரம்பமானது. இதனை முன்னிட்டு தொடர்ந்து 8 நாட்கள் தினமும் இரவு முனியசாமிக்கு சிறப்பு அலங்காரத்துடன் சிறப்பு பூஜையும் நடைபெற இருக்கிறது.

1ம் நாள் நிகழ்ச்சியில் சிறப்பு 301 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் உலகில் அன்பு அமைதி நிலவளம் வேண்டியும், தமிழகத்தில் நல்ல மழை பெய்து, வெயிலின் தாக்கம் குறைந்திடவும், அனைத்து உயிர்களுக்கும் தட்டுப்பாடு இல்லாமல் குடிதண்ணீர் கிடைத்திட வேண்டியும், விவசாயம் செழித்து அனைவரும் நலமுடன் வாழ வேண்டி பஜனை பாடல்களுடன் தீப அலங்காரம் நடைபெற்று பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதமும், குலுக்கள் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பாிசுகளும் வழங்கப்பட்டது. திருவிளக்கு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவிளக்கு பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்