December 1, 2025
#விளாத்திகுளம்

விளாத்திகுளத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

விளாத்திகுளம் தாலுகா அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் விளாத்திகுளம் வட்டத் தலைவர் குப்புராஜ் தலைமை வகித்தார்.மாவட்டத் தலைவர் முருகராஜ் முன்னிலை வகித்தார்.

கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலம் வரை ஊதியம் உடனடியாக வழங்க வேண்டும். கருணை அடிப்படையில் வாரிசுக்கு வேலை வழங்க வேண்டும். கிராம உதவியாளர்களை கிராம பணியை தவிர்த்து மற்ற பணிகளில் பயன்படுத்தக் கூடாது உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

கௌரவ ஆலோசகர் பழனிச்சாமி,வட்ட செயலாளர் சாலமன், பொருளாளர் சண்முக ராமநாதன் உட்பட கலந்து கொண்டனர்

.