December 1, 2025
#விளாத்திகுளம்

விளாத்திகுளம் யூனியன் அலுவலகத்தில் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

விளாத்திகுளம்,நெல்லை மாவட்டம் வள்ளியூர் ஒன்றியம் வேப்பிலங்குளம் ஊராட்சி செயலாளர் வேலைக்கு சென்ற போது சமூக விரோதிகளால் சங்கர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து

விளாத்திகுளம் யூனியன் அலுவலகத்தில் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் மாவட்ட தலைவர் கற்குவேல் தலைமை வகித்து பேசினார்.மாவட்ட மகளிரணி செயலாளர் லட்சுமி முன்னிலை வகித்தார்.விளாத்திகுளம் ஒன்றிய தலைவர் கிருபா பெஞ்சமின்,புதூர் ஒன்றிய தலைவர் வேல்முருகன்,விளாத்திகுளம் ஒன்றிய செயலாளர் சுரேஷ்,புதூர் ஒன்றிய செயலாளர் முத்துகண்ணன்,மாவட்ட இணை செயலாளர் தாமரை,மாவட்ட மகளிரணி செயலாளர் குருவழகு ஆகியோர் கண்டன உரையாற்றினர்.இதில் விளாத்திகுளம்,புதூர் ஒன்றியத்தை சேர்ந்த ஊராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டனர்.