தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கம் விளாத்திகுளம் உட்கோட்டம் சார்பில் விளாத்திகுளம் உதவி கோட்ட பொறியாளர் அலுவலகம் வளாகத்தில் வைத்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கம் விளாத்திகுளம் உட்கோட்ட தலைவர் கண்ணன் தலைமை வகித்தார்.உட்கோட்ட இணைச் செயலாளர் ராஜசேகர் முன்னிலை வகித்தார்.கோட்டத் தலைவர் பரணிதரன் தொடக்க உரையாற்றினார்.உட்கோட்ட செயலாளர் முருகன் கோரிக்கை விளக்க உரையாற்றினார்.மாநில செயலாளர் ஹரிபாலன்,உட்கோட்ட துணைத் தலைவர் கண்ணன் ஆகியோர் நிறைவுரையாற்றினார்.
கோட்ட பொறியாளர் திருமலை,தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வட்டச் செயலாளர் ராஜா ஆகியோர் வாழ்த்துரை ஆற்றினர்
.மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும்,ஊதியத்தில் 10 சதவீதம் ஆபத்து படி,நிரந்தர பயணப்படி,சீருடை சலவை படி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

