December 1, 2025
#தென்காசி மாவட்டம்

தென்மேற்கு பருவமழை தொடங்கியது!

அந்தமான் நிக்கோபர் தீவுகளில் தொடங்கும் பருவமழை படிப்படியாக குமரிமுனை, கேரளா என வட மாநிலங்களுக்கும் பரவும்.

எப்போதும் எதிர்பார்ப்பது மே 4-வது வாரத்தில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை என்று ஆனால் இந்தாண்டு சற்று முன்னதாகவே தொடங்கி உள்ளது.

கொளுத்தும் கோடைகாலத்தை தொடர்ந்து தொடங்கும் பருவமழை என்பதால் இந்த தென்மேற்கு பருவமழை மீதான வரவேற்பு  மற்றும் எதிர்பார்ப்பு எப்போதுமே அதிகம்.

இதனைத்தொடர்ந்து கேரளாவில் 27-ந்தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை இன்று தொடங்கியது.

மேலும் இது குறித்து தனியார் வானிலை ஆராய்ச்சியாளர் தென்காசி வெதர்மேன் ராஜா தனது வலைப்பதிவில் பதிவிட்டு தகவல்

மே 24- ந்தேதி தென்மேற்கு பருவமழை துவங்கியதாக வானிலை ஆய்வு மையம் அதிகார பூர்வமாக அறிவிப்பு வெளியிடும்.  என எதிர்பார்க்கப்படுகிறது.பருவமழை துவங்குவதன் முன்னோட்டமாக மே 19 அல்லது 20 ம்தேதி முதலே தென்மேற்கு பருவகாற்று வலுவடைந்து குமரி நெல்லை தென்காசியில் மழை பெய்யும்.அப்படியே வரும் மே-4வது வாரத்தில் குற்றாலத்தில் சாரல் சீசன் களைகட்டும் என தகவல் வெளியிட்டுள்ளார்.