December 1, 2025
#தூத்துக்குடி

பனிமய மாதா பேராலய திருவிழா ஜூலை 26ல் தொடங்குகிறது – ஆலய அதிபர் ஸ்டார்வின் பேட்டி

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தின் 443ஆம் ஆண்டு திருவிழா ஜூலை 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி ஆக.5ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அன்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு, உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


துாத்துக்குடி, பனிமய பேராலயத்தின் 443ம் ஆண்டு பெருவிழா. ஜூலை 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. ஆக.5ம் தேதி வரை திருவிழா நடக்கிறது. இதுகுறித்து, ஆலய அதிபர் அருட்திரு ஸ்டார்வின் செய்தியாளர்களிடம் கூறியதாவது;

ஜூலை 25ம் தேதி கொடிப்பவனி, ஆலயத்தை சுற்றி பவனி வருகிறது. 26ம் தேதி காலை 7:00 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் ஆண்டகை தலைமையில் கூட்டுத் திருப்பலி நடக்கிறது. காலை 8:15 மணிக்குள் கொடியேற்றப்படுகிறது.

விழாவில் ஆயர்கள், குருக்கள், இறைமக்கள், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர். விழாவை ஒட்டி 11 நாட்களும் ஜெப மாலை, தினமும் திருப்பலி, மதியம் 3:30 மணிக்கு மறையுரை, மாலை 7:15 மணிக்கு திவ்யநற்கருணை ஆசீர் நடக்கிறது.

ஆக. 3ம் தேதி ஆயர் ஸ்டீபன் ஆண்டகை தலைமையில், குழந்தைகளுக்கான புதுநன்மை திருப்பலியும், அன்று மாலை பேராலய வளாகத்தில் திரளான இறை மக்கள் பங்கேற்கும் திவ்விய நற்கருணை பவனியும் நடக்கிறது.

இந்த ஆண்டு திருவிழா சிறப்பு அம்சமாக, 4ம் தேதி மாலை5:30 மணிக்கு நிறை வேற்றப்படும் திருவிழாவிற்கான சிறப்பு திருப்பலி, ஐதராபாத் உயர் மறைமாவட்ட பேராயரும், கர்தினாலுமான அந்தோணி பூலா ஆண்டகை தலைமையில் நடக்கிறது. அன்று மாலை துாத்துக்குடி ஆயர் தலைமையில் மாலை ஆராதனை நடக்கிறது.

விழாவில் மிகச் சிறப்பம்சமாக அன்னையின் பெருவிழா ஆக. 5ம் தேதி நடக்கிறது. அன்று காலை 7:30 மணிக்கு ஆடம்பர திருப்பலி நடக்கிறது. ஆயர் ஸ்டீபன் ஆண்டகை, முன்னாள் ஆயர் இவோன் அம்புரோஸ் ஆண்டகை கலந்து கொள்கின்றனர்.

அன்று மாலை அன்னையின் சப்பர பவனி நடக்கிறது.ஆலயத்தில் இருந்து புறப்பட்டு சின்னக் கோயில் வரை சென்று மீண்டும் ஆலயத்தை அடைகிறது. லட்சக்க ணக்கான இறைமக்கள் சப்பர பவனியில் பங்கேற்கின்றனர். அன்றைய தினம் துாத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவிழாவிற்கு வருகைதரும் பக்தர்களின் வசதிக்காக, அரசு சார்பில் பஸ் வசதி உட்பட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது. அனைவரும் பங்கேற்று பனி மயமாதா அன்னையின் அருள் பெற்று செல்ல வேண்டும் என பங்குதந்தை ஸ்டார்வின் தெரிவித்தார்.நிகழ்வின் போது துணை பங்குதந்தை பிரவீன் ராசு, பேராலய பங்கு செயலாளர் எட்வின்பாண்டி யன், துணைத் தலைவர் அண்டோ, பொருளாளர் ஜோ சோரிஸ் மற்றும் மிக்கேல் அருள்ராஜ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.