இதுகுறித்து கல்லூரி முதல்வர் குமாரி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் :
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் கீழரத வீதியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2025-2026 ஆம் ஆண்டுக்கான மாணவ மாணவியர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
கல்லூரியில் பி.ஏ சைவ சித்தாந்தம், பி.பி.ஏ, பி.காம், பி.சி.ஏ, பி.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் இளங்கலை படிப்புகளும், சைவவியல் வைணவவியல் 6 மாத கால சான்றிதழ் படிப்பும் உள்ளது.
எனவே விளாத்திகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த மாணவ மாணவியர்கள் கல்லூரியில் சேர்ந்து பயன் பெறலாம்.
விண்ணப்ப கட்டண விபரம்:
விண்ணப்ப கட்டணம் ரூ50 மட்டும். பட்டியலின மாணவ மாணவியர்களுக்கு விண்ணப்ப கட்டணம் எதுவும் கிடையாது.
மேலும் கல்லூரி சேர்க்கை தொடர்பாகஏதேனும் தகவல் மற்றும் விரிவான விபரங்கள் தொடர்புக்கு,
9787403499,
9788258849,
6382415394
ஆகிய தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
.

