December 1, 2025
#கோவில்பட்டி

தமிழறிஞர் வீரமா முனிவர் பிறந்த நாள்: அரசு சார்பில் அமைச்சர் கீதாஜீவன் மரியாதை

by,CN அண்ணாதுரை

கோவில்பட்டி,தமிழறிஞர் வீரமா முனிவர் 344வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அன்னாரது மணிமண்டபத்தில் தமிழக அரசின் சார்பில் அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

தமிழ் வளர்த்த இத்தாலியப் பேரறிஞர் வீரமா முனிவர், தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் சிறப்பான பணிகளைச் செய்துள்ளார். தமிழுக்கு “ஆ, ஏ” எழுத்துக்களை உருவாக்கியவர்.

23 நூல்களைத் தமிழில் எழுதியதுடன், தமிழின் சிறப்பை பிற நாட்டு மக்கள் உணர திருக்குறளை லத்தீன் மொழியில் வெளியிட்டார். “தேம்பாவணி” காவியம் இயற்றினார். கவிதை வடிவில் இருந்த வந்த தமிழ் இலக்கிய இலக்கணங்களை மக்கள் எளிதில் படித்தறியத்தக்க உரைநடையாக மாற்றியவர் வீரமா முனிவர்.

இவரது 344வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு கோவில்பட்டி அடுத்த காமநாயக்கன்பட்டியில் அமைந்துள்ள மணிமண்டபத்தில் உள்ள வீரமா முனிவர் திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் க.மகாலட்சுமி, புனித பரலோக மாதா ஆலய பங்கு தந்தை அருட்திரு அந்தோணி குரூஸ், காமநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வி, கடம்பூர் நாகராஜா, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் அமலி  பிரகாஷ்,, கவுன்சிலர் ஜாஸ்மின் லூர்து மேரி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், ஆகியோர் கலந்து கொண்டனர்.