December 1, 2025
#விளாத்திகுளம்

விளாத்திகுளத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டம் இ. குமாரலிங்கபுரம் விஏஓ அஜிதாவை கனிம வளம் கொள்ளை குறித்து உரிய தகவல் அளிக்கவில்லை என்று கூறி மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தற்காலிக பணியிடை நீக்கம் செய்தார்.

இந்நிலையில் விஏஓ அஜிதா கனிம வளம் கொள்ளை குறித்து முறையான தகவல் அளித்தும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி அஜிதா பணியிட நீக்கம் செய்யப்பட்டதை ரத்து செய்ய வலியுறுத்தியும் விருதுநகர் மாவட்ட கலெக்டரை கண்டித்தும் விளாத்திகுளம் தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்திற்கு வட்டத் தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார்.மாவட்ட பொருளாளர் சித்துராஜ், மாவட்ட துணை தலைவர் உலகநாதன்,வட்ட பொருளாளர் அப்பணசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மண்டல செயலாளர் மாரிமுத்து கண்டன உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் விளாத்திகுளம் தாலுகாவிற்கு உட்பட்ட 30-க்கும் மேற்பட்ட விஏஓக்கள் கலந்து கொண்டனர்.