விளாத்திகுளம்-எட்டையாபுரம் சாலையில் சித்தவநாயக்கன்பட்டி விளக்கு அருகே ஆக்கிரமிப்பில் இருந்து அரசு புறம்போக்கு நிலங்கள் கடந்த ஆண்டு மீட்கப்பட்டு கம்பி வேலிகள் அமைத்து பாதுகாக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் அந்த நிலங்களில் அறம் செய் அறக்கட்டளை சார்பில் புங்கை,வேம்பு உள்ளிட்ட பயன்தரும் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.இதில் விளாத்திகுளம் தாசில்தார் ராமகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தார். 
இந்நிகழ்வில் சித்தவநாயக்கன்பட்டி விஏஓ சித்துராஜ்,இயற்கை ஆர்வலர் ஜேசுமணி, அறம் செய் அறக்கட்டளை டிரஸ்டி சுதாகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

