December 1, 2025
#தூத்துக்குடி மாவட்டம்

இந்திய மிஷனரி சங்கத்தின் ஆதரவு விற்பனை விழா தூத்துக்குடியில் சபை மக்கள் பொருட்கள் வாங்கி ஆதரவு

தூத்துக்குடி தென்னிந்திய திருச்சபையின் ஒரு அங்கமாக விளங்கும் ஐஎம்எஸ் எனும் இந்திய மிஷனரி சங்கமானது 1903ம் ஆண்டு பிஷப் அசரியா என்பவரால் தொடங்கப்பட்ட இந்திய பணத்தைக் கொண்டு இந்திய நிர்வாகத்தின் மூலம் இந்திய மக்களை சந்தித்து சுவிசேஷம் அறிவிக்கக் கூடிய ஒரு மிஷனரி இயக்கமாகும்.

இந்த இயக்கத்தின் மூலம் இந்தியாவில் உள்ள 27 மாநிலங்களில், 284 மாவட்டங்களில், 56 ஆயிரத்து 650 கிராமங்களில் 1163 ஆராதனை குழு ஏற்படுத்தி, 463 ஆலயங்கள் மூலம் 31எழை எளிய மக்களுக்கான விடுதிகள், இரண்டு மருத்துவமனைகள் மற்றும் 77 தையல் பயிற்சி பள்ளிகள், 7 கணினி பயிற்சி பள்ளிகள், 7 கல்விச்சாலைகள் அறியாமையினால் மூடநம்பிக்கையில் வாழும் மக்களை அறிவாற்றல் உள்ள மக்களாக மாற்றும் பணி என பல்வேறு சமூகப் பணிகள் இந்த மிஷினரி ஊழியம் மூலம் நடைபெற்று வருகிறது.

இந்த மிஷினரி ஊழியத்தில் 2500 க்கும் மேற்பட்டோர் இந்தியா முழுவதும் பணியாற்றி வருகின்றனர் இவர்களுடைய தேவைகளை சந்திக்கும் வண்ணமாகவும் புதிய ஆலயங்கள், புதிய கல்விக்கூடங்கள், மருத்துவமனைகள் கட்டுவதற்கு தேவையான நிதி ஆதாரத்தை பெருக்குவதற்காகவும் வருடம் தோறும் தூத்துக்குடி பரிசுத்த பேட்ரிக்ஸ் இணைப் பேராலயத்தில் இந்திய மிஷனரி சங்க ஆதரவு விற்பனை விழா நடத்தப்படுவது வழக்கம்.

இந்த விழாவில் சபை மக்கள் தங்களது வீடுகளுக்கு தேவையான உணவு பண்டங்கள், உணவு பதார்த்தங்கள், குளிர்பானங்கள், அலங்காரப் பொருட்கள், பழம் காய்கறி வகைகள் மற்றும் வீட்டுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் அதிக விலை கொடுத்து வாங்கி செல்வது வழக்கம் இந்த விற்பனை விழாவின் போது கிடைக்கக்கூடிய பணம் அனைத்தும் மிஷனரிகள் ஊழியத்திற்கு வழங்கப்படுகின்றது.

என்ற காரணத்தினால் சபை மக்கள் உற்சாகமாக பொருட்கள் வாங்கி செல்வார்கள் கடந்த வருடம் 43 லட்ச ரூபாய் இந்த விற்பனை மூலம் வசூல் செய்து இந்திய மிஷனரி சங்கத்திற்கு கொடுத்துள்ள நிலையில் இந்த வருடம் 50 லட்ச ரூபாய் வரை இந்த விற்பனை மூலம் நிதி திரட்டி மிஷினரிகள் ஊழியத்திற்கு அவர்கள் தேவைகள் சிந்திக்கப்படுவதற்காக நிதி வழங்கப்பட உள்ளதாக ஆலய குருவானவர் செல்வின் துரை தெரிவித்தார்.

சுமார் ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பழங்கள், உணவு பண்டங்கள், வைக்கப்பட்டிருந்த ஆசீர்வாத தட்டு 36,000 ரூபாய்க்கும் 32 ஆயிரம் ரூபாய்க்கும் சபை மக்கள் ஆர்வமுடன் ஏலம் எடுத்தனர்.

இந்நிலையில் விழாவை ஆலய குருவானவர் செல்வின்துரை தலைமையில், மாநகராட்சி ஒப்பந்ததாரரும் தொழிலதிபருமான முத்துச்செல்வம் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். விழாவில் முன்னாள்லே செயலாளரும் இந்திய மிஷினரி கிளைச் சங்க தலைவருமான எஸ்.டி.கே. ராஜன், தூத்துக்குடி இந்திய மிஷனரி கிளைச் சங்க பொருளாளர் தேவராஜன், இணைப்பேராலய உதவி குருவானவர்கள் காலேப் மேன்சிங், ஆனந்த மணி, தூய பேட்ரிக்ஸ் இணைப்பேராலய செயலாளர் எடிசன், தூய பேட்ரிக்ஸ் இணைப் பேராலய பொருளாளர் ஜெபசிங், முன்னாள் நகர மன்ற தலைவர் ஹென்றி, தூய பேட்ரிக் இனை பேராலய முன்னாள் செயலாளர் கோவில் பிச்சை, மற்றும் முன்னாள், இந்நாள் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் இந்த விழாவில் இரண்டு அணியினராக இருந்து செயல்பட்டவர்கள் ஒன்றிணைந்து ஒருவருக்கொருவர் சால்வைகள் அணிவித்து இன்முகத்துடன் தங்களது அன்பை பரிமாறிக் கொண்டது சபை மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.