by CN. அண்ணாதுரை
தூத்துக்குடி,ஒன்றிய பாஜக அரசின் மும்மொழி இந்தி திணிப்பை கண்டித்து திமுக மற்றும் மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு, தமிழ்நாடு (FSO-TN) மற்றும் தமிழ் மாணவர் மன்றம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் சார்பில் தூத்துக்குடியில் பாளை ரோடு சிதம்பரம் நகர் பேருந்து நிறுத்தம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் வடக்கு மாவட்ட திமுக மாணவர் அணி அமைப்பாளர் வழக்கறிஞர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. தெற்கு மாவட்ட திமுக மாணவரணி அமைப்பாளர் அருண்குமார், மதிமுக மாணவரணி அமைப்பாளர் அருண்குமார், இந்திய மாணவர் மன்ற தலைவர் கிஷோர் குமார் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தியைத் திணித்து மீண்டும் ஒரு மொழிப்போர் போராட்டத்திற்கு நிர்பந்திக்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து திமுக தலைமைக் கழக பேச்சாளர் சரத் பாலா மற்றும் மாணவரணியினர், இளைஞர் அணியினர் இணைந்து இந்தியை திணிக்காதே, ஏற்கமாட்டம் ஏற்கமாட்டோம் மும்மொழிக் கொள்கையை ஏற்க மாட்டோம், தேசிய கல்விக் கொள்கையை திணிக்காதே என ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
இதில், வடக்கு மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர்கள் ஆகாஷ் பாண்டியன், கனகராஜ், கோகுல்நாத், பிரதீபா, யோகலட்சுமி, தெற்கு மாவட்ட திமுக மாணவரணி துணை அமைப்பாளர்கள் காட்வின், பிரவீன் பிரசாத் தங்கமாரிமுத்து, ரெனீஸ், வடக்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி அமைப்பாளர் குபேர் இளம்பருதி, தூத்துக்குடி மாநகர திமுக இளைஞர் அணி அமைப்பாளர் அருண் சுந்தர், மாநகர மாணவரணி அமைப்பாளர் டைகர் வினோத், திமுக பகுதி செயலாளர்கள் பிரையன்ட் நகர் பகுதி ராமகிருஷ்ணன், அண்ணாநகர் பகுதி ரவீந்திரன், போல் பேட்டை பகுதி ஜெயக்குமார், சண்முகபுரம் பகுதி சுரேஷ்குமார், தமிழ் மாணவர் மன்றம் அமைப்பாளர் சீனிவாசன், திமுக வடக்கு மாவட்ட மருத்துவர் அணி தலைவர் அருண்குமார், மாநகர திமுக மாணவரணி துணை அமைப்பாளர்கள் பாலமுருகன், சத்தியா, கார்த்திகேயன், கந்தசாமி மாநகர திமுக இளைஞரணி துணை அமைப்பாளர்கள் செல்வின் சிவகுமார், டி.டி.சி.ஆர்.பிரவீன், சங்கர நாராயணன், வட்டச் செயலாளர்கள் மூக்கையா, சுப்பையா, சிங்கராஜ், செந்தில்குமார், மாமன்ற உறுப்பினர்கள் கந்தசாமி, வைதேகி, நாகேஸ்வரி, சரவணகுமார், தகவல் தொழில்நுட்ப அணி தொகுதி ஒருங்கிணைப்பாளர் சி.என்.அண்ணாதுரை, பகுதி இளைஞரணி அமைப்பாளர் சூர்யா, சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் மகேஸ்வரன் சிங், வட்ட பிரதிநிதிகள் குமார், சேசுராஜ், ரஜினி முருகன், உட்பட பல்வேறு மாணவர் அமைப்பினர் கலந்து கொண்டனர்.
மதிமுக சார்பில்; மாநகர செயலாளர் முருக பூபதி, தெற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சரவண பெருமாள், வடக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் பாலசுப்பிரமணியன், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் ராஜகுரு, ஒன்றிய செயலாளர்கள் மாரிச்சாமி, வீரபாண்டி சரவணன், கலை இலக்கிய அணி துணை செயலாளர் மகாராஜன், மாவட்ட பிரதிநிதிகள் கணேசமூர்த்தி, இராமதாஸ், கிளைச் செயலாளர் சீனிவாசன்,பொதுக்குழு உறுப்பினர் பால்ராஜ், புதூர் மேற்கு ஒன்றிய இளைஞரணி ராமமூர்த்தி, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் சேகர் மற்றும் மாணவர் பெருமன்ற நிர்வாகிகள் அருண்பாண்டியன், நந்தகுமார், முருகன், உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு பாஜக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
