தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் தூத்துக்குடி மத்திய ஒன்றிய திமுக இளைஞர் அணி சார்பில் கலைஞர் பிறந்தநாள் விழா – நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் அய்யனார் குளம் பகுதியில் நடைபெற்றது. மத்திய ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் சண்முக நாராயணன் தலைமையில், துணை அமைப்பாளர்கள் ராஜ் , பொன் யோசுவா, சங்கர், வடிவேல் நாதன், விஜய் செல்வராஜ் ,ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. மாவட்ட பிரதிநிதி வெயில்ராஜ் வரவேற்புரையாற்றினார். கூட்டத்தில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, ஒன்றிய செயலாளர் சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் எம்.சி.சண்முகையா எம்.எல்.ஏ, பேசுகையில்;
தமிழ்நாட்டு மக்களுக்கு கல்வி, மருத்துவம், தொழில் துறைக்கான கட்டமைப்புகளை சிறப்பான முறையில் உருவாக்கியவர் முத்தமிழறிர் கலைஞர். அதே வழியில் நம்முடைய முதலமைச்சரும் கல்வி, மருத்துவம், தொழில் துறை வளர்ச்சிக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி இந்திய ஒன்றியத்தில் நம்பர் ஒன் முதலமைச்சராக திகழ்கிறார். 2021ம் ஆண்டு திமுக ஆட்சி பொறுப்பு ஏற்கும் பொழுது கொரோனா பேரிடர் காலமாக இருந்தும் கூட ஒவ்வொரு குடும்ப அட்டை காரர்களுக்கு ரூபாய் 4000 வழங்கியது நம்முடைய முதலமைச்சர். அதோ போல தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மகளிரும் கட்டணமில்லாமல் நகர பேருந்துகளில் பயண செய்ய முதல்வர் ஆணை பிறப்பித்தார். அடுத்ததாக 2023 செப்டம்பர் 15ஆம் தேதி குடும்பத் தலைவிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை மாதம்தோறும் ரூபாய் ஆயிரம் வழங்க ஆணைப்பிறப்பித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். இதன் மூலம் ஒவ்வொரு குடும்பத் தலைவிகள் வங்கி கணக்கிலும் மாதம் ஆயிரம் செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 22,000 ரூபாய் உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதில் விடுபட்ட மகளிர்க்கு ஆகஸ்ட் மாதம் முதலமைச்சர் சிறப்பு முகாம் நடத்த உத்தரவிட்டுள்ளார்கள். இந்த பணிகளை ஒன்றிய செயலாளர், கிளைச் செயலாளர்கள் கண்காணித்து தங்கள் கிராமத்தில் விடுபட்ட பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கிடைப்பதற்கு வழி செய்வார்கள். மேலும் மாணவ மாணவிகளுக்கு புதுமைப்பெண், தமிழ்ப் புதவ்வன் திட்டங்கள் மூலம் மாதம் ரூபாய் 1000 வழங்கி வருகிறார். இப்படி வாக்களிக்காதவர்களுக்கு கூட பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது திமுக அரசு. இப்போது திமுக வுக்கு வாக்களிக்காத மக்கள் வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார்கள். திராவிட மாடல் அரசின் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வீடுகளுக்கும் மருத்துவ பணியாளர்கள் வந்து ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்ட பரிசோதனை செய்து தேவையான மருந்து மாத்திரைகளை கொடுத்து கண்காணித்து வருகிறார்கள். அதுபோல நான் முதல்வன் திட்டம் மூலம் படித்த இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்து வாழ்வாதாரத்தை உயர்த்தி வருகிறார்.
நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உழைப்பு உழைப்பு உழைப்பு என்ற இலக்கோடு தமிழக மக்களுக்காக எப்போதும் உழைக்கக் கூடியவர். நம்முடைய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளுக்காக உழைத்து வருகிறார் நமது நாடாளுமன்ற உறுப்பினர் துணை பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி முயற்சியில் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு தொழிற்சாலைகள், கல்லூரிகள் கொண்டுவரப்பட்டுள்ளது. தலைவர் கலைஞரின் மகள் நமது கனிமொழி எம்பி, நமது தொகுதி நிகழ்ச்சிகள் அனைத்திலும் கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கியுள்ளார். அதுபோல நமது அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்து சிறப்பாக பணியாற்றி வருகிறார். முதலமைச்சர் ஒரு நல்ல ஆணை பிறப்பித்துள்ளார் அதன் படி தமிழ்நாடு முழுவதும் பட்டாவுக்காக காத்திருப்பவர்களுக்கும், அய்யனார் குளம் கிராமத்தில் உள்ளவர்களுக்கும் விரைவில் பட்டா வந்துவிடும். நமது ஆற்றல் மிக்க ஒன்றிய செயலாளர் ஜெயக்கொடி மற்றும் கிளைச் செயலாளர்கள், அரசின் நலத்திட்டங்கள் மக்களுக்கு விரைந்து கிடைத்திட உதவ வேண்டும். அனைவரும் முதலமைச்சரின் கரத்தை வலுப்படுத்தி இரண்டாவது முறையாக மு.க.ஸ்டாலினை முதலமைச்சராக்கவும், ஏழாவது முறையாக திராவிட மாடல் திமுக ஆட்சி அமையவும் உறுதுணையாக இருக்க வேண்டும் என சண்முகையா எம்எல்ஏ பேசினார்.
நிகழ்ச்சியில் தலைமைக் கழக பேச்சாளர் ஆத்தூர் பாலசுப்ரமணியன் செயற்குழு உறுப்பினர் மாடசாமி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஏ.எம்.ஸ்டாலின், ஒன்றிய துணைச் செயலாளர் ஹரி பாலகிருஷ்ணன், அவைத்தலைவர் பாலசுந்தரம், மாவட்ட பிரதிநிதிகள் நாகராஜன், செல்வின், விவசாய அணி கோபால், வர்த்தகரணி செல்வின் ஜெயக்குமார், ஐ டிவி சின்னத்துரை பாண்டியன், தொண்டரணி கபரியேல் சைமன், மகளிர் அணி மீனாட்சி, மத்திய ஒன்றிய சார்பு அணி நிர்வாகிகள் மகேந்திரன், மொபட் ராஜன், பொன் செல்வன், மாரிமுத்து, சௌந்தரராஜன், அன்பரசன், வரலட்சுமி விஜய பாரதி, சிவராஜ் அந்தோணி சார்லஸ், மற்றும் கூட்டுடன் காடு, குமாரகிரி ஊராட்சி கிளைச் செயலாளர்கள் கலந்து கொண்டனர். நிறைவில் செல்வன் நன்றி கூறினார்.

