by,CN. அண்ணாதுரை
தூத்துக்குடி,வல்லநாடு ஆற்றுப்பாலத்தில் தொடர்ந்து பழுது ஏற்பட்ட இடத்தில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளை ஓட்டப்பிடாரம் எம்.எல்.ஏ சண்முகையா நேரில் ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி – திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வல்லநாடு அருகே பாலத்தில் தொடர்ந்து பழுது ஏற்ப்பட்டு சேதமடைந்து வந்தது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்ப்பட்டு, பொதுமக்கள் அச்சத்துடன் பயணம் மேற்கொண்ட நிலையில், பழுது ஏற்ப்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, 06.11.24 அன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் நெடுஞ்சாலைத் துறை அலுவலர்களிடம் சேதமடைந்த பகுதிகளை தரமான முறையில் சீரமைக்க வேண்டும் என எம்.எல்.ஏ கேட்டுக் கொண்டார்.
இந்த ஆய்வின் போது தேசிய நெடுஞ்சாலை ஆணைய மேலாளர் அகிலேஷ், வருவாய் ஆய்வாளர் மாதவன், கிராம நிர்வாக அலுவலர் கனகலட்சுமி,கருங்குளம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் திரு.சுரேஷ் காந்திகருங்குளம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் ராமசாமி, ஒன்றிய துணை செயலாளர் சுரேஷ், மாவட்ட பிரதிநிதி சீ.முருகன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், திமுகவினர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

