By, C.N.Annadurai,
தூத்துக்குடி,வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாடு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி,ஒட்டப்பிடாரம் சட்டமன்றதொகுதிக்குட்பட்டதிருவைகுண்டம் தாலுகா தாமிரபரணி ஆறு மருதூர் அணைக்கட்டில் நீர் இருப்பு குறித்தும் கரைகளின் உறுதித்தன்மை மற்றும் மதகுகளை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, இன்று 27.10.24 நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து சென்னல்பட்டி கிராமத்தில் மருதூர் மேலக்கால் உபரி நீர் போக்கி மற்றும் பாலத்தினை சண்முகையா எம்.எல்.ஏ, பார்வையிட்டார்.
கீழ புத்தனேரி கல்லடியூர் கிராமத்திலும் சாலை வசதி செய்து தர வேண்டும் என பொதுமக்கள் எம்.எல்.ஏ, விடம் கோரிக்கை விடுத்ததையடுத்து, அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து சாலை வசதி விரைவில் அமைத்து தரப்படும் என தெரிவித்த சண்முகையா எம்.எல்.ஏ, அங்குள்ள மக்களிடம் வடகிழக்கு பருவ மழையின் போது பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும் படியும், மழைக்காலங்களில் வெளியில் செல்வதை தவிர்க்கும் படியும் கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் கருங்குளம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் ராமசாமி, ஒன்றிய துணை செயலாளர் வீரபாகு, தூத்துக்குடி தெற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் சஞ்சய், ஊராட்சி மன்ற தலைவர் பொன்ராஜ் கிளைக் கழக செயலாளர், சுந்தர் அருணாச்சலம், அய்யாக்குட்டி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
