By,CN. அண்ணாதுரை
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை துவங்கி உள்ளதை அடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் படி,
ஒட்டபிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நீர் நிலைகளை சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா பார்வையிட்டு ஆய்வு செய்தும், மேலும் குளம் ஏரி கம்மாய் ஓடைகளை கண்காணிக்கும் வகையில் சண்முகையா எம்.எல்.ஏ, துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி மழை வெள்ள முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
இதன் தொடர்ச்சியாக ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் ஊரக வளர்ச்சி துறை சார்பில் பாலங்கள் அமைக்கும் பணிகளை சண்முகையா எம்.எல்.ஏ, 17.10.24 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதில் மாப்பிள்ளையூரணி ஊராட்சி ராஜபாளையம் – பெரிய செல்வன் நகர் இணைப்பு சாலையில் ரூபாய் 30 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு பாலங்கள் அமைக்கும் பணிகளையும்,
நெடுஞ்சாலை துறை சார்பில் சவேரியார்புரம் ,கோமாஸ் புரம் சாலையில் ரூபாய் 45 லட்சம் மதிப்பீட்டில் மூன்று சிறு பாலங்கள் அமைக்கும் பணிகளையும்,
ராஜிவ்நகர் ஹவுசிங் போர்டு அருகில் ஊரக வளர்ச்சி துறை சார்பில் ரூபாய் 30 லட்சம் மதிப்பீட்டில் பாலம் அமைக்கும் பணிகளையும் , ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர்
எம்.சி.சண்முகையா நேரில் ஆய்வு செய்தார். பின்னர் துறை சார்ந்த அலுவலர்களிடம் பணிகளை நல்ல முறையில் விரைந்து முடிக்க வேண்டுமென வலியுறுத்தினார்.
ஊரக வளர்ச்சி துறை சார்பில் மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் ரூபாய் 4.85 கோடி மதிப்பீட்டில் 2.கி.மீ தூரத்திற்கு மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகளை எம்.எல்.ஏ, ஆய்வு செய்தார். அதனைத்தொடர்ந்து
காட்டாற்று வெள்ளம் செல்லும் உப்பாற்று ஓடையை நேரில் பார்வையிட்ட ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம் சி.சண்முகையா, வடிகால் பணிகளையும், உப்பாற்று ஓடையில் மழை வெள்ள நீர் தடையின்றி செல்வதற்கு ஏதுவாக சுத்தப்படுத்தும் பணிகளை விரைந்து முடிக்க துறை சார்ந்த அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர் பானு,
உதவி பொறியாளர் ரவி,
நெடுஞ் சாலைத் துறை உதவி பொறியாளர் ஜெய ஜோதி,
ஊராட்சி மன்ற தலைவரும் தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளருமான சரவணக்குமார் தெற்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் பொன் பாண்டி ரவி, ஒன்றிய கவுன்சிலர் அந்தோணி சேவியர், ஒன்றிய துணைச் செயலாளர் கணேசன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்கமாரிமுத்து, கனிராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

