அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், டெல்லியில் உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து இன்றைய அரசியல் சூழ்நிலை பற்றி ஆலோசனை நடத்தினார்.
சமீபத்தில், அதிமுகவை ஒன்றிணைக்க 10 நாட்கள் அவகாசம் கொடுத்திருந்த செங்கோட்டையன், அதன் பின்னர் கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து, அவர் டெல்லி சென்றார். “மன அமைதிக்காக ஹரித்வார் செல்வதாக” ஆரம்பத்தில் செய்தியாளர்களிடம் கூறியிருந்தாலும், இறுதியில் அவரின் பயணம் அமித்ஷாவை நோக்கி திருப்பப்பட்டது.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “அமித்ஷாவை சந்திக்கும் அனுமதி கிடைத்ததால் சந்தித்தேன். அரசியல் நிலைமை, அதிமுகவின் வலிமை குறித்து பேசினோம். இயக்கம் வலுப்பெற வேண்டும் என்பதே என் குறிக்கோள். மக்கள் பணி மற்றும் இயக்க வளர்ச்சிக்காக தொடர்ந்து செயல்படுவேன்” என்று தெரிவித்தார்.

