by, Suresh Kumar
சாம்பவர் வடகரை அரசு மேல்நிலைப்பள்ளியின் தொன்மை பாதுகாப்பு மன்ற தலைவர் மற்றும் தலைமை ஆசிரியர் பா.பிரபாவதி அவர்களின் அனுமதியோடு 62 மாணவ/மாணவியர்கள் 6 ஆசிரியர்கள் சாரண மாணவர்களும் 9.11.2024 அன்று தொல்லியல் களப்பயணம் சென்றனர். கிருஷ்ணாபுரத்தில் கிருஷ்ணப்ப நாயக்கரால் கட்டப்பட்ட வெங்கடாசலபதி கோவில் கலை சிற்பங்களையும், கல் தூண், பழங்கால எழுத்து வடிவங்களையும் கண்டுகளித்தனர். தமிழரின் தொன்மை நாகரிகத்தை அறியும் பொருட்டு ஆதிச்சநல்லூர் அகழாய்வு நடைபெற்ற இடங்களையும், முதுமக்கள் தாழிகள், அங்கு கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களையும் பார்வையிட்டனர்.
அகழாய்வு பொறுப்பாளர் திரு. வெங்கடேஷ் அவர்கள் ஆதிச்சநல்லூர் 3000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்றும் மண்டை ஓடுகள், இரும்பு, பொருட்கள், தானியங்கள், நெல் மணிகள், தங்கம் போன்ற பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது என்று மாணவ/ மாணவவியர்களுக்கு சிறப்பாக விளக்கினார். திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தில் அறிவியல் ஆய்வகம், 3D படக்காட்சி, மற்றும் அறிவியல் பரிசோதனைகள் செய்து காட்டினார்கள். இந்நிகழ்வில் ஆசிரியர்கள் நடராஜன், அனிதா, சத்யா, மகேஷ்வரி, சண்முக ஜெகம், ஆகியோர் கலந்து கொண்டனர். தொல்லியல் களப்பயணம் அனைத்து நிகழ்வுகளையும் தொன்மை பாதுகாப்பு மன்ற பொறுப்பாசிரியர் மற்றும் சாரண ஆசிரியர் சி. நடராஜன் ஏற்பாடு செய்தார்.

