November 30, 2025
#தூத்துக்குடி

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.2000 கோடி கடன் – உதயநிதி தொடங்கி வைத்தார்

சேலத்தில் மாநில அளவிலான விழா

சேலம் தமிழகமுழுவதும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.2000 கோடி மதிப்பிலான வங்கி கடன் இணைப்புகள் மற்றும் அடையாள அட்டைகள் வழங்கும் மாநில அளவிலான விழா சேலத்தில் நடைபெற்றது.

இந்த விழாவில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு காசோலைகளையும் அடையாள அட்டைகளையும் வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார்

துணை முதல்வர் பேசுகையில் 

மகளிர் சுய உதவிக்குழுக்கள் தன்னம்பிக்கையுடன் முன்னேறி, குடும்பங்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் வகையில் அரசு தொடர்ந்து உதவிகரமாக செயல்படுகிறது,”என்று துணை முதல்வர் உரையாற்றினார்

இதனைத் தொடர்ந்து தூத்துக்குடியில் நடைபெற்ற விழாவில், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு காசோலைகளையும் அடையாள அட்டைகளையும் வழங்கி உரையாற்றினார் அப்போது  அவர் கூறுகையில்  “சுய உதவிக்குழுக்கள் இன்று நிதி தன்னிறைவை மட்டுமல்லாது, சமூக முன்னேற்றத்திற்கும் வழிகாட்டுகின்றன. இதை மேலும் விரிவுபடுத்த மாநில அரசு உறுதியாக செயல்படும்,” என்று அமைச்சர் கூறினார்.விழாவில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி துணை ஆட்சியர் ஜஸ்வர்யா மாநகராட்சி ஆணையர் பிரியங்கா துணை மேயர் ஜெனிடாஅரசு அலுவலர்கள், கட்சி நிர்வாகிகள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்

 

.