December 1, 2025
#தூத்துக்குடி மாவட்டம்

சாலை மேம்பாடு & அங்கன்வாடி பாதுகாப்பு: பாஜக வடக்கு மாவட்ட வர்த்தக பிரிவு தலைவர் முத்தமிழ்செல்வன் சார்பில் ஆட்சியரிடம் மனு

தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் இன்று சாலை மேம்பாடு மற்றும் அங்கன்வாடி பாதுகாப்பு உள்ளிட்ட இரண்டு முக்கிய பொதுப்பணிகள் தொடர்பாக மனு வழங்கப்பட்டது.

புதியம்புத்தூர்–மேலமடம் கைகாட்டி சந்திப்பிலிருந்து நடுவக்குறிச்சி வரையிலான சுமார் 1 கி.மீ சாலை கடந்த 10 ஆண்டுகளாக முழுமையாக சீரமைக்கப்படாமல் சேதமடைந்த நிலையில் உள்ளது. வாகனங்கள் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், உடனடியாக தார் சாலை அமைக்கக் கோரியும், கோவில்பட்டி நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் மற்றும் ஓட்டப்பிடாரம் உதவி கோட்டப் பொறியாளர் ஆகியோருக்கு தேவையான நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

அதேபோல், புதியம்புத்தூர் பூங்கா அருகிலுள்ள அங்கன்வாடி – 3 மையத்தில் மின் மீட்டர் மீது மழைநீர் கசிவு ஏற்படுவது மற்றும் அருகில் டிரான்ஸ்பார்மர் இருப்பது குழந்தைகளின் பாதுகாப்பிற்கு ஆபத்தான சூழ்நிலையை உருவாக்குகிறது. எனவே மின் வசதிகளை உடனடியாக சீரமைப்பது மற்றும் டிரான்ஸ்பார்மரை மாற்றி அமைப்பது ஆகியவை மிக அவசியம் என மனுவில் குறிப்பிடப்பட்டது.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி பாஜக தூத்துக்குடி வடக்கு மாவட்ட வர்த்தக பிரிவு தலைவர் முத்தமிழ்செல்வன் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு வழங்கினார்.