December 1, 2025
#விளாத்திகுளம்

விளாத்திகுளத்தில் அரசு பள்ளி கல்லூரிகளில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் விழிப்புணர்வு கருத்தரங்கு

விளாத்திகுளம்,அக்.11: விளாத்திகுளத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் சுப்பிரமணிய சுவாமி கலைக் கல்லூரியில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 இன் கீழ் அக்டோபர் 5 முதல் 12 ஆம் தேதி வரையில் தகவல் அறியும் உரிமை சட்டம்(ஆர்டிஐ) வாரம் அனுசரிக்கப்படுகிறது.

இதன்படி தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றி பொதுமக்கள்,பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கருத்தரங்கம் மற்றும் விழிப்புணர்வு பேரணி நடத்திட மாவட்ட கலெக்டர் இளம் பகவத் உத்தரவிட்டிருந்தார்.

இதனையடுத்து விளாத்திகுளம் வருவாய் துறை சார்பில் விளாத்திகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி தலைமை ஆசிரியர் தவசிமுத்து தலைமையிலும், சுப்பிரமணிய சுவாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்லூரி முதல்வர் குமாரி தலைமையிலும் தகவல் அறியும் உரிமம் சட்டம் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கு நடத்தப்பட்டது.

இதில் விளாத்திகுளம் தலைமையிடத்து துணை தாசில்தார் சரஸ்வதி,ஆர்ஐ ராணி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடங்கப்பட்டதன் முக்கிய நோக்கம், அதனை பயன்படுத்தும் முறை, தகவல் அறியும் உரிமம் சட்டத்தின் கீழ் வரும் அரசு துறைகள் பற்றியும் வராத துறைகள் பற்றியும், எவ்வாறு பொது தகவல்களை பெற வேண்டும், எத்தனை நாட்களுக்குள் தகவல் பெற முடியும் என்பது பற்றியும் விரிவாக எடுத்துக் கூறினர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விளாத்திகுளம் விஏஓ கயல்வேந்தன் செய்திருந்தார

விளாத்திகுளம் சுப்பிரமணியசுவாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்து கருத்தரங்கு நடத்தப்பட்டது.