December 1, 2025
#தூத்துக்குடி

கிழக்கு மண்டல மக்கள் குறைதீர்க்கும் முகாமில் பெறப்பட்ட மனுக்களுக்கு தீர்வு! ஆணைகளை மேயர் ஜெகன் பெரியசாமி மக்களுக்கு வழங்கினார்

தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள நான்கு மண்டலங்களிலும் ஒவ்வொரு புதன்கிழமை தோறும் மண்டல வாரியாக மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது அதன்படி 20.11.24 அன்று கிழக்கு மண்டலத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இவ்வாறு பெறப்பட்ட கோரிக்கை மனுக்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் விரைந்து தீர்வு காணப்பட்டு இன்று 22.11.24 அதற்கான ஆணைகளை மாநகராட்சி அலுவலகத்தில் வைத்து மேயர் ஜெகன் பெரியசாமி ஒன்பது நபர்களுக்கு ஆணைகளை, ஆணையர் மதுபாலன், துணை மேயர் செ.ஜெனிட்டா முன்னிலையில் வழங்கினார். பல காலமாக நிலுவையில் இருந்த கோரிக்கை மனுக்களுக்கு தற்போது உடனடி தீர்வு காணப்பட்டுள்ளது. இந்த ஆணைகளைப் பெற்றுக் கொண்ட மக்கள் மேயருக்கு நன்றி தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில் மேயர் ஜெகன் பெரியசாமி கூறுகையில்;

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சிகுட்பட்ட நான்கு மண்டலங்களிலும் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை தோறும் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது. இதில் பெறப்படும் கோரிக்கை மனுக்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் ஆய்வு செய்து அதற்கான தீர்வுகள் காணப்பட்டு வருகின்றது. கிழக்கு மண்டல முகாமில் புறப்பட்ட 27 மனுக்களில் ஒன்பது மணிக்கு தீர்வு காணப்பட்டு அதற்கான ஆணைகளை மக்களுக்கு வழங்கியுள்ளோம்.

சமீபத்தில் மாநகரில் பெய்த தொடர் மழையில் 60 வார்டுகளிலும் சுமார் 10 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்துள்ள போதிலும்

மாநகராட்சி மேற்க்கொண்ட பல்வேறு கட்டமைப்பு நடவடிக்கைகளால் கடந்த முறை மழை நீர் தேங்கிய பகுதிகளில் இந்த முறை மழைநீர் தேங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது,

இந்த மழையின் போது 16,17,18 மற்றும் 51 வது வார்டுகளில் மழை நீர் தேங்கியுள்ளது.

இப்பகுதியில் மக்களின் நலன் கருதி உடனடியாக சாலைகளில் தேங்கி இருந்த மழைநீர் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. ஒருசில இடங்களில் பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் குப்பைகள் மூடையாக தேங்கியுள்ளது இந்த பிளாஸ்டிக் பொருட்களால் அடைப்பு ஏற்பட்டு மழை நீர் செல்ல வழி இல்லாமல் அடைப்பு ஏற்பட்டது. இந்த வார்டுகளில் 25 சதவீதம் தனி நபர் காலியிடங்கள் உள்ளது அந்த இடங்களில் தான் மழை நீர் தேங்கியுள்ளது இந்த இடங்களின் உரிமையாளரை கண்டறிந்து காலி இடத்தில் மழைநீர் தேங்காதவாறு மேடுபடுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மழைக்காலம் காலங்களில் மழைநீர் தேங்காத வகையில் ஆங்காங்கே மோட்டர் பம்ப்கள் வைக்கப்பட்டுள்ளது அதுபோல மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுகாதாரத் துறை பணியாளர்கள் 60 வார்டுகளிலும் களப் பணியாற்றி வருகிறார்கள்.

மழைநீர் தேங்கி இருக்கும் பகுதிகள் குறித்து உடனடியாக தகவல் தெரிவித்தால் அதனை அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் ஜெகன் பெரியசாமி கூறினார்.            நிகழ்ச்சியில் கிழக்கு மண்டல உதவி ஆணையர் வெங்கட்ராமன், ஆணையரின் உதவியாளர் துரைமணி, மேயரின் உதவியாளர் ரமேஷ், மற்றும் ஜேஸ்பார் பொதுக்குழு உறுப்பினர் கோட்டு ராஜா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.