தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நடைபெற உள்ள கரோல் வாகன கொண்டாட்ட நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகளை அரசு சார்பில் செய்து தர வேண்டும் என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரும், வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவனிடம் கரோல் வாகன கொண்டாட்ட கண்காணிப்புக் குழுவினர் கோரிக்கை மனு அளித்தனர்.போல்பேட்டை முகாம் அலுவலகத்தில் அமைச்சர் கீதாஜீவனை, கண்காணிப்புக் குழு தலைவர் அலங்கார பரதர், செயலாளர் மனோஜ்குமார், பொருளாளர் இக்னேசியஸ் ஆகியோர் சந்தித்து மனுவை வழங்கினர். அதில் கூறியிருப்பதாவது:
“கடந்த 50 ஆண்டுகளாக தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கரோல் வாகன அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி இரவு நடைபெற்ற அணிவகுப்பில் சில விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்தன. குறிப்பாக காவல்துறை கவனக்குறைவால் மின்சாரம் திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் எழுந்தன.
மதங்களைக் கடந்து பலரும்;
இவ்விழாவில் மதங்களைக் கடந்து பலரும் கலந்து கொள்கிறார்கள். இது தூத்துக்குடி மக்களின் ஒற்றுமையைக் காட்டும் விழாவாக மாறியுள்ளது. இந்நிகழ்ச்சி இந்தியாவில் கோவா மற்றும் தூத்துக்குடி என இரு நகரங்களில் மட்டுமே இவ்வளவு சிறப்பாக நடைபெறுகிறது. எனவே, இவ்வாண்டு எந்த குறைபாடும் இல்லாமல் விழா சிறப்பாக நடைபெற அரசு சார்பில் தேவையான முன்னேற்பாடுகளை செய்து தர வேண்டுகிறோம்” என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் கண்காணிப்புக் குழு நிர்வாகிகள் ரூஸ்வால்ட், ஜோசப் மணி, விஜயன், பெசில் கோஸ்தா, செல்வம், பெனிட்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

