தூத்துக்குட புத்தகத் திருவிழா மற்றும் நெய்தல் கலை திருவிழா – 2024, தூத்துக்குடி சங்கரபேரி சாலைப் பிரிவில் உள்ள திடலில் தூத்துக்குடி 5வது புத்தகத் திருவிழா கோலாகலமாக நேற்று (03/10/2024) துவங்கியது. அக்டோபர் 11 ஆம் முதல் 13ஆம் தேதி வரை நெய்தல் கலைத் திருவிழாவும் நடைபெறவுள்ளது.
தூத்துக்குடியின் 5வது புத்தகத்திருவிழாவின் 2ஆம் நாளான இன்று (04/10/2024) திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி புத்தக அரங்குகளைப் பார்வையிட்டு, புத்தகங்களை வாங்கி மகிழ்ந்தார். மேலும், வாசகப் பெருமக்களோடு உரையாடினார்.
இன்றைய கருத்தரங்கில் சிறப்புரையாற்றிய விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் ரவிக்குமார் மற்றும் கலைஞர் தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியர் திருமாவேலன் ஆகியோரை கனிமொழி எம்.பி கௌரவித்தார்.

விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி. மார்கண்டேயன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
புத்தகத் திருவிழாவில், புத்தகக் கடைகளில் ஏராளமான புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. தோட்டக்கலை சார்பாகக் காய்கறிகள் மற்றும் பழங்களைக் கொண்டு வீடு, பறவைகள், பூக்கள் போன்ற வடிவத்தைச் செய்து பார்வைக்காக வைத்திருந்தனர், அது வருபவர்களின் கண்களைக் கவரும் வகையிலிருந்தது. இந்த புத்தகத் திருவிழாவில் நாவல், சிறு கதைகள், சட்ட புத்தகங்கள், செய்யுள் புத்தகங்கள், வரலாறு, குழந்தைகளுக்கென தனிப் புத்தகங்கள் எனப் பல வகையான புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன

