December 1, 2025
#Columnist/கட்டுரையாளர்

தூய்மை இந்தியா இயக்கம் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவைக் குறிக்கும் வகையில், அக்டோபர் 2-ம் தேதி தூய்மை இந்தியா தினம் 2024-ல் பிரதமர் நரேந்திர மோடி கொண்டாடுகிறார்

முனைவர் க. சுதா கல்வியாளர்
திருவள்ளுவர் தமது திருக்குறளில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, எழுதிச்சென்றுள்ள கருத்துக்களையும், அறிவுரைகளையும் கற்றாலே சுற்றுசூழலின் தூய்மை நன்கு உணரப்படும்!
புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை வாய்மையால் காணப் படும். 
புறந்தூய்மை’-

என்பது நாம் அன்றாடம் குளித்தல், துணிகளைத் துவைத்தல், பாத்திரங்களைக் கழுவுதல், வீட்டைக் ஒழுங்குசெய்தல் முதலியனதானே?

இந்தியாவில், மக்கள் அதிகமாக வாழும் இடங்களில், முழுசுகாதாரம் என்பது கேள்விக்குறியாக உள்ளது. கண்ட இடங்களில் மலம், சிறுநீர் கழிப்பது, எச்சில் துப்புவது, ஈ மொய்த்த உணவுப் பண்டங்களை வாங்கி உண்பது, சாக்கடை வாய்க்கால் ஒரங்களில் குடியிருப்பது, கழிவு நிர் தேங்கி நிற்கும் இடங்களை சுத்தப்படுத்தாதது, தெருக்களில் குப்பைகளைக் கொட்டுவது போன்றவற்றால் புறந்தூய்மை சீர்கேடு அடைகிறது, எனவே, மக்களும், அரசும் ‘புறந்தூய்மை’யை ஏற்படுத்துவது மிகவும் அவசியம். அதன் மூலம் சுற்றுச் சூழலை பாதுகாக்க வேண்டும் என்பதை சொல்லாமல் சொல்லி வலியுறுத்துகிறார் வள்ளுவர்.

அதனைப் போல் தான் நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களும், புறந் தூய்மை அகத் தூய்மை மிகவும் முக்கியம், என்று கருதி தூய்மை இந்தியா திட்டத்தை நாம் அனைவரும் முன்னின்று செயல்பட வலியுறுத்தி வருகிறார் அவரும் செயல் புரிகிறார். அத்தகைய தூய்மை இந்தியா பிரச்சாரத் திட்டத்தின் முக்கிய சாதனைகளை பார்ப்போம்.

மேம்பட்ட சுகாதாரம்: உலக சுகாதார அமைப்பு (WHO) 2014 உடன் ஒப்பிடும்போது 2019 இல் 3 லட்சத்திற்கும் குறைவான மக்கள் வயிற்றுப்போக்கால் இறந்துள்ளனர், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் மலேரியா, இறந்த பிறப்பு மற்றும் குறைந்த எடையுடன் பிறப்பு ஆகியவற்றைக் குறைப்பதற்கும் பாரதப் பிரதமரின் இந்த

முன்னெடுப்பிற்கு மேம்பட்ட சுகாதாரம் திட்டம் உதவியுள்ளது. இதனால் குழந்தை இறந்த பிறப்பு விகிதம் குறைந்துள்ளது.
கழிப்பறைகள்:

இந்த திட்டம் 1 கோடி கிராமப்புற வீடுகளுக்கு வெற்றிகரமாக கழிப்பறைகளை வழங்கியுள்ளது மற்றும் 6.3 லட்சம் கிராமங்களில் சுமார் 5 கோடி மக்கள் கழிப்பறைகளினால் பயனடைந்துள்ளனர்.

  • பல கிராமங்கள் ODF

(திறந்த மலம் கழித்தல் இலவசம்) என அறிவிக்கப்பட்டுள்ளது, அதாவது ஒவ்வொரு வீட்டிற்கும் கழிப்பறை வசதியும் செய்ய, கழிப்பறை கட்ட ரூ.12,000 வழங்கி உள்ளது.திறந்த வெளியில் மலம் கழிப்பதைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு, வீட்டிலேயே கழிப்பறைகள் மற்றும் சமூகத்திற்குச் சொந்தமான கழிப்பறைகளைக் கட்டுதல் மற்றும் தெருக்கள், சாலைகள் மற்றும் வீடுகளைச் சுற்றி தூய்மையைப் பராமரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

பெண்களுக்கான சிறந்த பாதுகாப்பு:

UNICEF இன் படி, 93% பெண்கள் தங்கள் வீடுகளில் கழிப்பறை வைத்த பிறகு பாதுகாப்பாக உணர்கிறார்கள்.

  • குடும்பங்களுக்கான சேமிப்பு:

ODF கிராமங்களில் உள்ள குடும்பங்கள் ஆண்டுக்கு சராசரியாக ரூ. 50,000 ஆரோக்கியம் தொடர்பான செலவுகளில் சேமிக்கின்றன. குடும்ப உறுப்பினர்களின் சேமிப்பு அதிகரித்து வருகிறது.

குறைக்கப்பட்ட நிலத்தடி நீர் மாசுபாடு: தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம், ODF கிராமங்களில், மனிதனால் நிலத்தடி நீர் மாசுபடுவதற்கான வாய்ப்பு 12.7 மடங்கு குறைவாக உள்ளது.

  • ஸ்வச் ஐகானிக் இடங்கள்:

இந்த முயற்சியானது இந்தியாவில் உள்ள சின்னச் சின்ன இடங்களை சுத்தம் செய்யவும், பராமரிக்கவும் பெருநிறுவனங்கள் மற்றும் தனியார் நபர்களின் ஆதரவைப் பெற்றுள்ளது.

  • தூய்மைக்கான விருதுகள்:

இந்தியா முழுவதும் உள்ள நகரங்கள் மற்றும் மாநகரங்கள் அவற்றின் துப்புரவு மற்றும் தூய்மை முயற்சிகளின் அடிப்படையில் ‘ஸ்வச் சிட்டி’களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இதனால் கிராமங்கள் நகரங்கள் போன்றும் நகரங்கள் ஹைடெக் சிட்டிகள் போன்றும் தோற்றமளிக்கின்றது.

சர்வதேச அங்கீகாரம்: ஸ்வச் பாரத் மிஷனின் கீழ் முன்னேற்றம் அடைந்ததற்காக பிரதமர் மோடி 2019 இல் பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் உலகளாவிய கோல்கீப்பர் விருதைப் பெற்றார் என்பது நாம் பெருமைப்பட வேண்டிய விஷயம்.

  • நகர்ப்புற சுகாதாரம்:

ஸ்வச் பாரத் மிஷன் (நகர்ப்புறம்) நகர்ப்புற இந்தியாவை திறந்த வெளியில் மலம் கழிப்பதில் இருந்து விடுபடுவதையும், நகராட்சி திடக்கழிவுகளை 100% அறிவியல் பூர்வமாக மேலாண்மை செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
தூய்மை பாரதம் படைப்போம் சுகாதாரமாக வாழ்வோம்