December 1, 2025
#தூத்துக்குடி

பிரதமர் மோடி பிறந்தநாள் விழா: தூத்துக்குடியில் பாஜக சார்பில் ஆயுஷ் ஹோமம், 200 பேருக்கு வேட்டி-சேலை வழங்கல்

தூத்துக்குடி, செப்.27:

பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாளை முன்னிட்டு நாடு முழுவதும் பாஜக சார்பில் நடத்தப்பட்டு வரும் “சேவை வார விழா”வின் ஒரு பகுதியாக, தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக சார்பில் இன்று ஆயுஷ் ஹோமம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சி வடக்கு ரதவீதியில் உள்ள டி.ஏ. திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு 200 நபர்களுக்கு வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்ட துணைத் தலைவர் சிவராமன், முன்னாள் மாவட்ட பொருளாளர் சண்முகசுந்தரம், ஆன்மீக பிரிவு மாநில துணைத்தலைவர் நெல்லையம்மாள், கிழக்கு மண்டல தலைவர் ராஜேஷ் கனி, மண்டல பொதுச் செயலாளர் லட்சுமி, வேல்கனி கொரைரா, இளைஞரணி மாவட்ட தலைவர் சக்திவேல், மகளிர் அணி மாவட்ட தலைவி வெள்ளத்தாய், ஆன்மீக பிரிவு மாவட்ட தலைவர் ஓம் பிரபு, மருத்துவ பிரிவு தலைவர் பாலாஜி, மகளிர் அணி மண்டல தலைவி செல்வி சொக்கலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.