December 1, 2025
#தூத்துக்குடி மாவட்டம்

மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக தூத்துக்குடியில் நாளை மின்தடை

தூத்துக்குடி மின் பகிர்மான வட்டம், அய்யனார் துணை மின்நிலையத்தில் நாளை மாதாந்திர மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.;

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தூத்துக்குடி மின் பகிர்மான வட்டம், அய்யனார் துணை மின்நிலையத்தில் மாதாந்திர மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (10.7.2025, வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பின்வரும் இடங்களில் மின்தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மாப்பிள்ளையூரணி, ஜோதிநகர், திரேஷ்நகர், ஹைசிங்போர்டு, குமரன்நகர், காமராஜ்நகர், டேவிஸ்புரம், சாகிர்உசேன்நகர், சுனாமிநகர், நேருகாலனி கிழக்கு, ஜீவாநகர், லூர்தம்மாள்புரம், தாளமுத்துநகர், கோயில்பிள்ளைவிளை, ஆரோக்கியபுரம், T.சவேரியார்புரம், மாதாநகர், ராஜாபாளையம், சிலுவைபட்டி, கிருஷ்ணராஜாபுரம், முத்துகிருஷ்ணாபுரம், மேலஅரசடி, கீழஅரசடி, வெள்ளப்பட்டி, தருவைகுளம், பணையூர், தளவாய்புரம், கோமஸ்புரம், பட்டிணமருதூர்,உப்பளபகுதிகள்,பனையூர்,ஆனந்தமாடன்பச்சேரி, வாழ்சமுத்திரம், மேலமருதூர், அ.குமாரபுரம்,திரேஸ்புரம், மேலஅலங்காரதட்டு, மாணிக்கப்புரம், பூபாலராயர்புரம்,குருஸ்புரம், சங்குகுளிகாலனி, மேட்டுப்பட்டி, முத்தையார்காலணி, வெற்றிவேல்புரம், ராமர்விளை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.இவ்வாறுஅதில் கூறப்பட்டுள்ளது.