தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தூத்துக்குடி மின் பகிர்மான வட்டம் அய்யனார் துணை மின்நிலையத்தில் நாளை வியாழக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
அதன் காரணமாக மாப்பிள்ளையூரணி, திரேஷ் நகர், குமரன்நகர், காமராஜ் நகர், டேவிஸ்புரம், சாகிர் உசேன் நகர், நேரு காலனி கிழக்குப் பகுதி, ஜீவா நகர், லூர்தம்மாள்புரம், தாளமுத்து நகர், கோயில் பிள்ளை விளை, ஆரோக்கியபுரம், சவேரியார்புரம், மாதா நகர், ராஜபாளையம், சிலுவைப்பட்டி, கிருஷ்ணராஜபுரம், முத்துகிருஷ்ணாபுரம், மேலஅரசடி, கீழ அரசடி, வெள்ளபட்டி, தருவை குளம்,
பட்டிணமருதூர், உப்பளபகுதிகள், பனையூர், அனந்தமடபச்சேரி, வாலசமுத்திரம், மேலமருதூர், அ.குமாரபுரம் மற்றும் திரேஸ்புரம், பூபாலராயர் புரம், அலங்காரதட்டு, எஸ்.எஸ்.மாணிக்கபுரம், குரூஸ்புரம், சங்குகுளி காலனி, மேட்டுப்பட்டி, முத்தரையர் காலனி, வெற்றிவேல்புரம், முத்துகிருஷ்ணா புரம், ராமர்விளை ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

