December 1, 2025
#விளாத்திகுளம்

விளாத்திகுளம், வேம்பார், குளத்தூர், சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின்தடை!

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளான மந்திகுளம், அயன்பொம்மையாபுரம், அயன் செங்கல்படை, கமலாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள ஊர்கள் மேலும் சூரங்குடி துணை மின் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளான ஈ.வேலாயுதபுரம், வேம்பார், விருசம்பட்டி, பச்சையாபுரம், பெரியசாமிபுரம்  மேல்மாந்தை அதனை சுற்றியுள்ள ஊர்கள்.

குளத்தூர் துணை மின் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளான புளியங்குளம், பூசனூர், கெச்சிலாபுரம், சுப்பிரமணியபுரம் அதனை சுற்றியுள்ள ஊர்களில்  மாதாந்திர மின் பராமரிப்பு பணியின் காரணமாக நாளை 6.8.2024  செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்பதை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தூத்துக்குடி ஊரக செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.