தூத்துக்குடி: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் ஊரக கோட்டம் பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் பொதுமக்களுக்கு மின் தடை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அறிவிப்பின் படி, 04.10.2025 சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, கீழ்காணும் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
வாகைகுளம் உபமின் நிலையம் – கூட்டுடன் காடு, மங்களகிரி, ஏர்போர்ட், பவானிநகர், வல்லநாடு, மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள்
விளாத்திகுளம் / குளத்தூர் / சூரங்குடி உபமின் நிலையங்கள் – கமலாபுரம், சூரங்குடி, வைப்பார், வேம்பார், வீரபாண்டியபுரம், அரியநாயகிபுரம் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்கள்.
மின் விநியோகம் நிறுத்தப்படும் மேலும் இது மழைக்காலம் என்பதால் இயற்கை சூழலுக்கு ஏற்றார் போல் இந்த அறிவிப்பு மாற்றத்திற்கு உட்பட்டது என தகவல் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

