தனி ஸ்டேஜ் கட்டணம் அமலுக்கு – 12.09.2025 முதல் நடைமுறை
தூத்துக்குடி மாவட்டம் பொட்டலூரணி மக்களின் நீண்டகாலக் கோரிக்கையான தனி ஸ்டேஜ் கட்டணம் இறுதியாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
பொட்டலூரணி விலக்கு, திருநெல்வேலி–தூத்துக்குடி நெடுஞ்சாலையில் மக்களின் முதன்மையான பேருந்து நிறுத்தமாக இருந்தும், அங்கு பேருந்துகள் முறையாக நின்று செல்லாததால் மக்கள் பல ஆண்டுகளாக போராடி வந்தனர். அண்மைக் காலங்களில் சில நடத்துநர்கள், வாகைக்குளம் ஸ்டேஜ் கட்டணம் எனக் கூறி பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்ததால் மக்களிடையே கடும் அதிருப்தி ஏற்பட்டது.இதனைத் தொடர்ந்து, கடந்த 02.09.2025 அன்று பொட்டலூரணி மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டு தனி ஸ்டேஜ் கட்டணம் வழங்கக் கோரினர். அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையின் பின்னர் 08.09.2025 அன்று மீண்டும் சாலை மறியல் நடத்தப்பட்டு, பிரச்சனைக்குத் தீர்வு கிடைக்கும் வரை மக்கள் அங்கு தங்கியிருந்தனர். இறுதியில், திருநெல்வேலி மண்டல போக்குவரத்து மேலாளர் உத்தரவின் பேரில், பொட்டலூரணிக்கு தனி ஸ்டேஜ் கட்டணம் வழங்கும் சுற்றறிக்கை வெளியிடப்பட்டு, 12.09.2025 முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்களின் ஒற்றுமையால் கிடைத்த இந்த வெற்றிக்கு, ஒருங்கிணைப்பாளர் சங்கரநாராயணன் மகிழ்ச்சி தெரிவித்ததோடு, போராட்டத்தில் பங்கேற்ற அனைத்து பொதுமக்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

