தூத்துக்குடி,காமராஜரை இழிவாக பேசிய திமுக எம்பி திருச்சி சிவாவை கண்டித்து தூத்துக்குடியில் பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முன்னாள் முதலமைச்சர் காமராஜரை அவதுறாக பேசிய மாநிலங்கள் அவை உறுப்பினர் திருச்சி சிவாவை கண்டித்து, தூத்துக்குடியில் சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் அருகில் பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் சார்பில் நிறுவனத் தலைவர் எஸ்.பி. மாரியப்பன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சாமுவேல் ராஜ், மாவட்ட தலைவர் வேல்முருகன், மாநில செயலாளர் தருவை சண்முகவேல், மாநில பொருளாளர் எம்.எஸ்.டி. ரவிசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அகில இந்திய நாடார் பேரவை மாநில வழக்கறிஞர் பிரிவு தலைவரும், உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான ஜெயச்சந்திரன், மூத்த வழக்கறிஞர் ஜெயபால், வழக்கறிஞர் டேவிட் கணேசன், தமிழ்நாடு நாடார் பேரவை மாவட்ட தலைவர் சிவா, மாவட்ட செயலாளர் செல்வம், தமிழ்நாடு காமராஜர் பேரவை மாவட்ட இணைச் செயலாளர் ராஜ்குமார், தமிழ்நாடு வணிகர் பேரமைப்பு தென்மண்டல தலைவர் கோடீஸ்வரன், வணிகர் பேரமைப்பு மத்திய மாவட்ட துணைச் செயலாளர் அந்தோணி வளன், காமராஜர் லட்சியப் பேரவை நிறுவனத்தலைவர் பிரசன்னகுமார் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பெருந்தலைவர் மக்கள் நலச்சங்க நிறுவனத் தலைவர் எஸ்.பி. மாரியப்பன் கூறுகையில்; பெருந்தலைவர் காமராஜரை இழிவாக பேசிய திமுக திருச்சி சிவா எம்பி, உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் அனைத்து சமுதாய மக்களையும் திரட்டி அடுத்த கட்ட போராட்டங்கள் நடைபெறும். தூத்துக்குடி வருகை தரும் தமிழக முதலமைச்சருக்கு நாங்கள் கருப்பு கொடி காட்டவும் தயங்க மாட்டோம் என கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில், காமராஜர் லட்சிய பேரவை அமைப்பாளர் சுந்தர், இளைஞரணி தலைவர் தினேஷ், துணைத் தலைவர் வெற்றிவேல், மாவட்ட தொண்டரணி ஆகாஷ், பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் மாநில துணைத் தலைவர் யோபு சாலமோன், மாவட்ட பிரதிநிதி வேல்மயில், மாவட்ட துணைத் தலைவர் கணேஷ், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் மார்க்கெட் முருகன், மாநில துணைத் தலைவர் கணேசன், நட்டாத்தி குமார், இளைஞரணி சிவா, பெனிட்டோ, சில்பாடு பொன்சிங், ஆனந்த், கே.பி.செல்வா, தொழிலதிபர் தமிழ்செல்வன் வடக்கு மாவட்ட செயலாளர் முனீஸ்வரன், விளாத்திகுளம் ஒன்றிய செயலாளர் முனியசாமி, மாவட்ட துணைச் செயலாளர் சக்தி நாராயணன், ரஞ்சித் அழகுதுரை, கோல்டன் ஸ்டீல் குமார் ஜேக்கப், கிறிஸ்டோபர், கார்த்திக் மற்றும் மகளிரணியினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

