December 1, 2025
#தூத்துக்குடி

பேரறிஞர் அண்ணாவின் 117வது பிறந்தநாள் விழா – தூத்துக்குடி 29வது வார்டு பகுதிசபா கூட்டம்

தூத்துக்குடி பழைய பஸ் ஸ்டாண்ட் அண்ணா பேருந்து நிலையத்தில், மாநகராட்சி 29வது வார்டின் சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 117வது பிறந்தநாள் விழா மற்றும் பகுதிசபா கூட்டம் கிழக்கு மண்டலத் தலைவர் கலைச்செல்வி திலகராஜ் தலைமையில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கிழக்கு மண்டல சுகாதாரத் துறை அதிகாரி நெடுமாறன் கலந்து கொண்டு, பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார். மக்கள் தங்கள் பகுதிகளில் நிலுவையில் உள்ள பணிகளை விரைவாக நிறைவேற்றித் தருமாறு கோரிக்கை வைத்தனர். மேலும், அப்பகுதியில் காணப்படும் குறைகள் தொடர்பாகவும் கேட்டு அறிந்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் திமுக மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் அருண் குமார், வட்டப் பிரதிநிதிகள் டி. குமரன், நா. சரவணன், வட்ட பொருளாளர் எ. நாராயணன், அமைப்புசாரா ஓட்டுநர் அணி முத்துராமலிங்கம், வட்டப் பிரதிநிதி ஆர். கண்ணன், மாநகர அயலக அணி அமைப்பாளர் அல்லாபிச்சை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.