தூத்துக்குடி:தமிழக வெற்றி கழகத்தின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழகம் பிரைட்டர், அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன் ஆகியோரை கடுமையாக சாடியுள்ளார்
🔹 அமைச்சர்களின் விமர்சனத்துக்கு பதிலடி
நேற்று தூத்துக்குடியில், மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் விஜய்யை விமர்சித்தனர்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பிரைட்டர் கூறியதாவது: எங்கள் தலைவர் விஜய் குறித்து பேச அமைச்சர்களுக்கு எந்த தகுதியும் இல்லை.
சுனாமி, கொரோனா காலத்தில் உதவிகளை அமைதியாக செய்தவர் விஜய். இரத்ததானம், இலவச உணவு, குழந்தைகளுக்கான உதவிகள் என பல திட்டங்கள் செய்துள்ளார்.
🔹 அனிதா ராதாகிருஷ்ணன் 25 ஆண்டு என்ன செய்யவில்லை என்பதை நாங்கள் பட்டியலிட்டு கூறுவோம்
25 ஆண்டுகளாக சட்டமன்ற உறுப்பினராக உள்ள அனிதா ராதாகிருஷ்ணன், மக்களுக்காக என்ன செய்தார்? இளைஞர்களுக்கான தொழிற்சாலைகள் எதுவும் இல்லை. வேலைவாய்ப்பு திட்டங்கள் எதுவும் இல்லை.
🔹 திருச்செந்தூரின் நிலை
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாடு முழுவதும் பக்தர்கள் வருகிறார்கள். ஆனால் அங்குள்ள சுகாதார நிலைமை படுமோசம். சட்டமன்ற அலுவலகம் பின்னால் கழிவு நீர் ஓடிக்கொண்டே இருக்கிறது. மருத்துவமனை அருகே துர்நாற்றம் பரவுகிறது. இதற்கெல்லாம் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
குடிநீர் பிரச்னை – புன்னகாயல் கிராமம்
ஆண்டாண்டு காலமாக புன்னகாயலில் குடிநீர் பிரச்னை நீடிக்கிறது.மக்கள் போராட்டம் செய்த பிறகும், 40 நாட்களுக்கு ஒருமுறை தான் தண்ணீர் வருகிறது. ஆத்தூர் பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு, இன்னும் கட்டப்படவில்லை.உடன்குடி பகுதியில் ஒரே திட்டத்தை நான்கு முறை செய்து வருகிறார்கள்.30 லட்சம் ரூபாயில் நடந்த வேலை மீண்டும் கோடிகளில் டெண்டர் எடுத்து செய்கிறார்கள். இதுதான் திராவிட மாடலா?
🔹 விஜய் = எம்ஜிஆர்
மக்கள், எம்ஜிஆரின் மறு உருவமாக விஜய்யை பார்க்கிறார்கள்.
எம்ஜிஆர் திமுகவிலிருந்து பிரிந்து தனி கட்சி ஆரம்பித்தது, அங்குள்ள சேட்டைகளால் தான். வரலாற்றை முழுமையாக சொல்லாமல் பாதியில் நிறுத்திவிட்டீர்கள் ஏன்? திமுக கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் பொய்யானவை. மேலும் கீதா ஜீவன் எங்களை கொள்கையில்லாதவர்கள் என்று சொல்கிறார். தளபதி எங்களுக்கு ஒழுக்கம் கற்றுத் தந்துள்ளார்.
ஆனால் கடமை கண்ணியம் கட்டுப்பாடு எனக்கூறும் திமுகவின் மூத்த அமைச்சர்களே உச்சநீதிமன்றத்தால்எச்சரிக்கப்பட்டவர்கள். என்பதை மறந்துவிடாதீர்கள் என கடுமையாக சாடினார்

