தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் வட்டம் முத்துலாபுரம் குறுவட்டத்தில் தாப்பாத்தி, அயன்வடலாபுரம், அச்சங்குளம் வேடப்பட்டி, மேலக்கரந்தை, சக்கிலிபட்டி, மாசார்பட்டி, அயன்ராஜாபட்டி,வெம்பூர் அழகாபுரி போன்ற கிராமங்களைச் சார்ந்த மாணவ மாணவியர் பந்தல்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று வருகின்றனர் இம்மாணவ மாணவியர் கோவில்பட்டியில் இருந்து அரசு பேருந்து காலை 7:15க்கு புறப்பட்டு தாப்பாத்தி7.50 மேலக்கரந்தை காலை 7.55,வெம்பூர் காலை 8.00 மணிக்கு வரக்கூடிய பேருந்தில் பயணம் செய்து பள்ளிக்குச் செல்கின்றனர் இந்நிலையில் நேற்றைய தினம் காலை 7:55க்கு மேலக்கரந்தையிலிருந்து பந்தல்குடி செல்வதற்கு மாணவர்கள் அப் பேருந்தில் ஏறினர் .வெம்பூர் நிறுத்தம் வந்தவுடன் நடத்துனர் மற்றும் ஓட்டுநர் மேலக்கரந்தை மாணவர்களை சுமார் 11 பேரை படியில் இருந்து இறக்கி விட்டு பஸ்சை எடுத்து சென்று விட்டனர்.

சரியான கூடுதல் பேருந்து வசதி இல்லாததால் பள்ளி மாணவர்கள் அவதி;
இதனால் பள்ளிக்குச் செல்ல முடியாமல் வெம்பூரில் இருந்து மேலக்கரந்தைக்கு சுமார் நான்கு கிலோமீட்டர் தூரம் கால்நடையாக வந்து வீடு சேர்ந்தனர்.
இந்த சம்பவத்தால் அதிருப்தியடைந்த பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள், கரிசல் பூமி விவசாயிகள் சங்கத் தலைவர் வரதராஜன் மற்றும் மேலக்கரந்தை முன்னாள் ஊராட்சி தலைவர் மாரீஸ்வரி தலைமையில் அரசு பேருந்தை சிறைபிடித்து மறியல் நடத்தினர். அப்போது அவர்கள் கூறியதாவது: “பள்ளிக்குச் செல்லும் மாணவர்களுக்கு அரசு பேருந்தில் முன்னுரிமை அளிக்காமல் நடுவழியில் இறக்கிவிடுவது கல்வி உரிமையை பறிப்பதற்கு சமம். மாணவர்கள் பாதுகாப்பாக பள்ளி சென்று வர அரசு துறைகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதே நிலை தொடர்ந்து கடந்த ஐந்தாண்டுகளாக இப் பேருந்தில் காலை 8 மணி பேருந்தில் அதிக கூட்டம் வருவதால் பள்ளி மாணவ மாணவியர் ஏற முடியவில்லை. இதனால் கூடுதல் பேருந்து கேட்டு பல தடவை போராட்டம் நடத்தப்பட்டது. அரசு அதிகாரிகள் கூடுதல் பேருந்து இயக்கப்படும் என உறுதி அளித்தனர். ஆனால் இதுவரை கூடுதல் பேருந்து இயக்கப்படவில்லை.
ஏற்கனவே கோவில்பட்டியில் இருந்து வரக்கூடிய பேருந்தில் கூட்டமாக வருகிறது அது போக இங்கிருந்து பள்ளி மாணவர்கள் 80 க்கும் மேற்பட்டோர் பயணம் செய்வதால் பேருந்தில் இட வசதி இல்லை. இதனால் தினந்தோறும் பள்ளிக்கு உரிய நேரத்தில் செல்ல முடியாமலும் தலைமை ஆசிரியரிடமும் தினமும் தண்டனை பெறுகின்றனர்.
மேலும் நேற்றைய தினம் பள்ளி செல்ல முடியாத 11 மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இன்று காலை 7:55க்கு மேலக்கரந்தைக்கு வரக்கூடிய அரசு பேருந்தை கரிசல் பூமி விவசாயிகள் சங்கத் தலைவர் வரதராஜன். மற்றும் மேலக்கரந்தை முன்னாள் ஊராட்சி தலைவர் மாரீஸ்வரி தலைமையில் சிறை பிடித்து மறியல் செய்தனர் . அப்போது பெரும் பரபரப்பு ஏற்பட்டது அதன் பின்னர் அங்கு வந்த மாசார்பட்டி காவல் ஆய்வாளர் லட்சுமி பிரபா மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் திருநெல்வேலி மண்டலம் தூத்துக்குடி கோட்ட மேலாளர் மற்றும் கோவில்பட்டி அரசு போக்குவரத்து கழக பனிமனை மேலாளர் விளாத்திகுளம் அரசு போக்குவரத்துக் கழக பனிமனை மேலாளர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பெற்றோர் மாணவியர் மற்றும் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் அதனைத்தொடர்ந்து இன்று முதல் பேருந்து எவ்வித இடையூறும் இல்லாமல் பள்ளிக்கு அனைவரையும் ஏற்றி செல்வதாகவும் இனிமேல் இதுபோன்று எவ்வித சிரமமும் இருக்காது. என்று உறுதி அளித்ததை அடுத்து பேருந்து விடுவிக்கப்பட்டது,பள்ளி மாணவ மாணவியர் பந்தல்குடி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு புறப்பட்டு சென்றனர் இதனால் அப்பகுதியில் சற்று நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

