November 30, 2025
#கோவில்பட்டி

கோவில்பட்டி கல்லூரியில் பள்ளி ஜே.ஆர்.சி. கவுன்சிலர்களுக்கான ஒரு நாள் சிறப்பு முகாம்.

கோவில்பட்டி சுபா நகரில் உள்ள உண்ணாமலை தொழில்நுட்ப கல்லூரி கூட்ட அரங்கில் கோவில்பட்டி கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பள்ளிகளில் செயல்பட்டு வரும் ஜே.ஆர்.சி. கவுன்சிலர்களுக்கான ஒரு நாள் சிறப்பு முகாம் கடந்த 29.10.24  அன்று நடந்தது.

கல்லூரியின் சேர்மன் விஜயன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் டாக்டர் ரவீந்திரன் முன்னிலை வகித்தார். கோவில்பட்டி கல்வி மாவட்ட ஜே.ஆர்.சி. கன்வீனர் ஆரோக்கியராஜ் அனைவரையும் வரவேற்று செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளித்து வாழ்த்தி பேசினார். தொடர்ந்து

பேரிலோவன்பட்டி நாடார் மேல் நிலைப்பள்ளி மேனாள் மாவட்ட ஜே.ஆர். சி.கன்வீனர் பாலகிருஷ்ணன், நாகலாபுரம் சாமி அய்யா நாடார் மேல் நிலைப்பள்ளி

மேனாள் ஜே.ஆர்.சி. கவுன்சிலர் சுரேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு ஜூனியர் ரெட்கிராஸ் பாடத்திட்ட செயல்பாடுகள், நோக்கம், ஏழு அடிப்படைக் கொள்கைகள் விளக்கம் அளித்து பயிற்சி அளித்தனர்.

தூத்துக்குடி மாவட்ட ஐ.ஆர்.சி. எஸ். எம்.சி. உறுப்பினர் மோகன்ராஜ், விருதுநகர் மாவட்ட ஐ.ஆர்.சி.எஸ். செயலாளர் பாலமுருகன், தன் ஆர்வலர் கழுகுமலை மேனாள் ஆசிரியர் இராஜேந்திரன் மற்றும் கோவில்பட்டி கல்வி மாவட்ட அனைத்து பள்ளிகளின் ஜே.ஆர்.சி. கவுன்சிலர் பொறுப்பு ஆசிரியர்கள் கலந்து கொண்டனர், கல்லூரி உதவி பேராசிரியர் மகாராஜன் நன்றி கூறினார்.