தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா 117 பிறந்த தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி காய்கறி மார்க்கெட் சந்திப்பில் உள்ள அறிஞர் அண்ணா சிலைக்கு மேயர் ஜெகன் பெரியசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான முக.ஸ்டாலின் தமிழ்நாட்டை தலை குனிய விடமாட்டேன் என்று அண்ணா பிறந்தநாளன்று தமிழகம் முழுவதும் பாக முகவர்கள், ஓரணியில் தமிழ்நாடு பிரச்சார இயக்கத்தின் மூலம் திமுகவில் தங்களை குடும்பமாக இணைந்து கொண்ட உறுப்பினா்கள், பாக உறுப்பினர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் சபதம் எடுத்துக்கொள்ள வேண்டும். என்று கூறியிருந்தாா். அதன்படி
அறிஞர் அண்ணா 117வது பிறந்தநாளையொட்டி புதிய மாநகராட்சி அருகிலுள்ள அண்ணா சிலைக்கு வடக்கு மாவட்ட திமுக சாா்பில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன் தலைமையில், மேயர் ஜெகன் பெரியசாமி மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
பின்னர் முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க கல்வி நிதி, நீட் , எஸ்ஐஆர், உள்ளிட்ட 7 கோாிக்கைகள் அடங்கிய “தமிழ்நாட்டைத் தலை குனிய விடமாட்டேன்” என்ற உறுதிமொழியை மேயர் ஜெகன் பெரியசாமி முன்னிலையில் திமுகவினர் எடுத்துக்கொண்டனா்.
நிகழ்ச்சியில் துணைமேயர் ஜெனிட்டா, மாநில திமுக பொறியாளர் அணி துணை செயலாளர் அன்பழகன், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணைச்செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், பொருளாளர் ரவீந்திரன், மண்டலத் தலைவர்கள் வக்கீல் பாலகுருசுவாமி, நிா்மல்ராஜ், கலைச்செல்வி, மாநகர அவைத்தலைவர் ஏசுதாஸ், பொதுக்குழு உறுப்பினர் கஸ்தூரிதங்கம், மாநில பேச்சாளர் சரத்பாலா, மாவட்ட அணி நிா்வாகிகள் கவிதாதேவி, குபேர் இளம்பரிதி, பிரபு, நாகராஜன், அருணாதேவி, ராமர், ஜேசையா, நிக்கோலாஸ்மணி, அருண்குமாா், முருகராஜ், பகுதி செயலாளர்கள் ராமகிருஷ்ணன், ரவீந்திரன், மேகநாதன், மாநகர அணி நிர்வாகிகள் கிறிஸ்டோபர் விஜயராஜ், பரமசிவம், ஆனந்தசேகா், ரவி, சத்யா, நாராயணவடிவு, சாகுல்ஹமீது, முருகஇசக்கி, சக்திவேல், மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், சக்திவேல், செல்வக்குமாா், தொழிற்சங்க நிா்வாகிகள் கருப்பசாமி, வேல்முருகன், வட்டச்செயலாளர்கள் கதிரேசன், சதீஷ்குமார், சுப்பையா, ரவீந்திரன், பாலகுருசாமி, சுரேஷ், கங்கா ராஜேஷ், டென்சிங், பொன்ராஜ், சிங்கராஜ், பொன்னுசாமி, செல்வராஜ், பாலு, செந்தில்குமாா், மூக்கையா, முனியசாமி, கவுன்சிலர்கள் சரவணக்குமார், வைதேகி, கந்தசாமி, பவாணி ரெக்ஸின், இசக்கிராஜா, பொன்னப்பன், அந்தோணி பிரகாஷ்மார்ஷலின், ஜான், பகுதி மகளிர் அணி துணை அமைப்பாளர் ரேவதி, மற்றும் அற்புதராஜ், பிரபாகர், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

