சென்னை அண்மையில் ஒன்றிய அரசு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்த வக்ஃப் சட்டத் திருத்த மசோதா-2024 மீது ஆட்சேபணை தெரிவித்து தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை தயாரித்துள்ள அறிக்கையை இன்று (19/09/2024) சென்னை சிஐடி காலனி இல்லத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதியை நேரில் சந்தித்து தமிழ்நாடு ஜமா அத்துல் உலமா சபை மாநில பொதுச் செயலாளர் மௌலானா Dr.அன்வர் பாதுஷாஹ் உலவி, துணைப் பொதுச்செயலாளர்கள் மௌலானா இல்யாஸ் ரியாஜி, மௌலானா Dr.காஜா முயீனுத்தீன் ஜமாலி ஆகியோர் வழங்கினர்.
தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் துணைத்தலைவர் இறையன்பன் குத்தூஸ் உடனிருந்தார்.

