பக்கிள் ஓடை முழுமையாக தூர்வாரப்படும் மழைக்கால முன்னேற்பாட்டில் நகராட்சி தீவிர நடவடிக்கை!
தூத்துக்குடி மாநகர பகுதிகளில் நிலத்தடி நீரை பாதுகாக்கவும் மழைநீரை சேமிக்க புதிய குளங்கள் மற்றும் வடக்கு மண்டலத்தில் நவீன மினி விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்படும், மழைக்கு முன்னதாக பக்கிள் ஓடை முழுமையாக தூர்வாரப்படும் என வடக்கு மண்டல மக்கள் குறைதீர்க்கும் முகாமில் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் 06.08.25 இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமிற்கு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கினார், மாநகராட்சி ஆணையர் பானோத் ம்ருகேந்தர் லால், துணை மேயர்செ.ஜெனிட்டா முன்னிலை வகித்தனர். வடக்கு மண்டல தலைவர் நிர்மல்ராஜ் வரவேற்றார்
முகாமில் மேயர் ஜெகன் பொியசாமி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு பேசுகையில்;
தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க மாநகராட்சி பகுதியில் ஓவ்வொரு வாரமும் மண்டல வாரியாக மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது, இதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதுபோல
உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்படும் மாநகராட்சி சம்பந்தப்பட்ட மனுக்களுக்கும், இங்கு வழங்கப்படும் கோாிக்கை மனுக்களுக்கும் விரைவான முறையில் தீா்வு காணப்படும். உங்களுடன் ஸ்டாலின் முகாம் தமிழ்நாடு அரசின் 13 துறைகளின் கீழ் 43 சேவைகளை மக்கள் பயன் பெற்றுக் கொள்ளலாம்.
பாலிதீன் பைகளை முற்றிலும் தவிர்க்க அழைப்பு – தூத்துக்குடி நகரம் பசுமையாக மாறும்
தூத்துக்குடி மாநகரில் 1500 பணியாளர்கள் தினமும் அதிகாலையில் குப்பைகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்கள் குப்பைகளை தரம் பிரித்து கொடுத்து பழக வேண்டும். குறிப்பாக பாலிதீன் பைகள் பயன்பாட்டை மக்கள் முற்றிலும் தவிர்த்து வருங்கால சந்ததிக்கு பசுமையான மாநகராட்சியை உருவாக்கி தர வேண்டும் அதுதான் நம் நகரின் சொத்து. மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பக்கிள் ஓடையில் ஆறு கிலோ மீட்டர் தூரத்திற்கு தூர்வாரப் படுகிறது. ஓடையில் பெருமளவு பிளாஸ்டிக் பாட்டில்கள் பாலிதீன் பைகள் கொட்டப்படுகிறது. இதனை பொதுமக்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும். கடந்த மழைக் காலங்களில் மாநகராட்சி பகுதிகளில் தண்ணீர் தேங்கும் இடங்களை தொடர்ந்து கண்காணித்து, அந்தப் பகுதிகளில் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு தற்போது தண்ணீர் தேங்காத நிலையை உருவாக்கி உள்ளோம்.மேலும் மாநகராட்சி 5 வந்து வார்டு எழில் நகர் எஸ்கேஎஸ்ஆர் காலனியில் செயற்கை புல்தரையுடன் கூடிய சிறிய அளவிலான விளையாட்டு அரங்கங்கம், சிறப்பாக அமைக்கப்பட்டு வருகிறது. மாநகரின் நிலத்தடி நீரை பாதுகாக்க ஸ்டெம் பார்க், மச்சாது நகர் பகுதிகளில் மழைநீரை சேமிப்பதற்காக சிறிய அளவிலான குளங்கள் உருவாக்கப்பட்டு பணிகள் நடைபெறுகிறது. மண்டலத்திற்கு ஒரு ஜேசிபி வண்டி என நான்கு ஜேசிபி வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளது. இதனால் மழைக்காலங்களில் பணிகள் தங்கு தடையின்றி விரைந்து நடைபெறும் என மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் செயற் பொறியாளர் தமிழ் செல்வன், துணை ஆணையர் சரவணகுமார், உதவி ஆணையர் சுரேஷ்குமார், நகர் அமைப்பு திட்ட பொறியாளர் முனீர் அகமது, மாமன்ற உறுப்பினர்கள் கீதா முருகேசன், ஜெயசீலி, தெய்வேந்திரன், நாகேஸ்வரி, சுப்புலட்சுமி, ரெங்கசாமி, கற்ப்பகக் கனி, மற்றும் சுகாதார அலுவலர் ராஜசேகர், குழாய் ஆய்வாளர்கள், போல் பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகர், உட்பட பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

