December 1, 2025
#தூத்துக்குடி

தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரியில் புதிய பல்நோக்கு மருத்துவமனை – அரசு செயலாளர் ஆய்வு

தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் ரூ.136 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பல்நோக்கு மருத்துவமனை கட்டிடத்தினை இன்று (23.08.2025) அரசு செயலாளர் (சுகாதாரத்துறை) மரு. பி.செந்தில்குமார், இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டார்.

இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. க.இளம்பகவத், இ.ஆ.ப., மற்றும் மருத்துவக்கல்லூரி முதல்வர் மரு. சிவகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

நவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ள இக்கட்டிடம், நோயாளிகளுக்கான பராமரிப்பு பிரிவுகள், அவசர சிகிச்சை பிரிவு, ஆய்வகங்கள் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ சேவைகளை ஒரே இடத்தில் வழங்கும் வகையில் அமைந்துள்ளது.

மக்களுக்கு தரமான சுகாதார சேவைகள் வழங்குவதற்கான முக்கிய முன்னேற்றமாக இந்த புதிய மருத்துவமனை இருக்கும்,என அரசு செயலாளர் தெரிவித்தார்.