December 1, 2025
#தூத்துக்குடி

மழையால் வீடுகளை இழந்தவர்களுக்கு புதிய வீடுகள்! அமைச்சர் கீதாஜீவன் அடிக்கல் நாட்டினார்

CN. அண்ணாதுரை

தூத்துக்குடி மாவட்டத்தில் முந்தைய ஆண்டுகளில் பெய்த பெரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் தூத்துக்குடியில் அனைத்து பகுதிகளிலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. ஏராளமானோர் தங்களது வீடுகளை உடமைகளை இழந்து பரிதவித்தனர். இந்த வெள்ள பாதிப்புகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பத்துக்கும் மேற்பட்ட அமைச்சர்களை தூத்துக்குடி மாவட்டத்தில் தங்கியிருந்து வெள்ள நிவாரண மீட்பு பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டார். இதில் திமுக வடக்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் கீதாஜீவன் தூத்துக்குடி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தீவிரமாக வெள்ள மீட்பு நிவாரணப் பணிகளை மேற்கொண்டு மக்களை இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதனால் மக்கள் விரைந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். இந்நிலையில் மழை வெள்ளத்தால் வீடுகளை முற்றிலும் இழந்து தவித்த மக்களுக்கு வீடுகளை கட்டுவதற்கு அமைச்சர் கீதாஜீவன் முயற்சி செய்தார்.

சொன்னதை செய்த அமைச்சர் கீதாஜீவன்

இதனையடுத்து தூத்துக்குடி மாநகராட்சி 49 வது வார்டு பாலம் ராஜபாண்டி நகரில் மழை வெள்ளத்தால் முழுவதும் வீடுகளை இழந்த மக்களுக்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் அவர்கள் ஏற்பாட்டில் ஜே.எஸ்.டபுள்யு நிறுவன சமூக பொறுப்பு நிதியுதவியுடன் முதல்கட்டமாக 10 வீடுகள் கட்டும் பணிகளை 23.01.25 அன்று அமைச்சர் கீதாஜீவன் அடிக்கல் நாட்டி வீடு கட்டும் பணிகளை துவக்கி வைத்தார். தொடர்ந்து ராஜபாண்டி நகர் எம் ஜி ஆர் நகர் பகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்தும் நேரில் பார்வையிட்டும் ஆய்வு செய்தார்.

இந்நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், பிரையன்ட் நகர் பகுதி செயலாளர் ராமகிருஷ்ணன், ஜே.எஸ்.டபுள்யு அலுவலர் சந்திரமோகன், வட்டச் செயலாளர் மூக்கையா, மாமன்ற உறுப்பினர்கள் வைதேகி, சரவணகுமார், ராஜேந்திரன், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், தகவல் தொழில்நுட்ப அணி தொகுதி ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை, அவைத் தலைவர் பெரியசாமி, வட்ட பிரதிநிதிகள் பாபு, வட்ட துணை செயலாளர் மரியதாஸ், ஆதிதிராவிடர் நல அணி பகுதி அமைப்பாளர் ஆறுமுகசாமி மற்றும் திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.