December 1, 2025
#தூத்துக்குடி

நாம் தமிழர் கட்சியினர் திமுகவில் ஐக்கியம், அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்

 By,CN. அண்ணாதுரை 

தூத்துக்குடி மாநகரம் – முத்தையாபுரம் பகுதி நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சிவபாலன் தலைமையில் சுமார் 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகி தூத்துக்குடி கலைஞர் அரங்கில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். அவர்களை அமைச்சர் கீதாஜீவன் சால்வை அணிவித்து வரவேற்றார்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கீதாஜீவன்;

திமுக தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் திராவிட மாடல் கொள்கைகளாலும், திமுக ஆட்சியின் சிறப்பான செயல்பாடுகளாலும் ஈர்க்கப்பட்டும் , தமிழக இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரம் கழகத்தின் இளைஞரணி செயளாலர் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செயலாற்றலாலும் ஈர்க்கப்பட்டு, நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகி திராவிட முன்னேற்றக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டுள்ள இளைஞர்களை வரவேற்கிறேன். நீங்கள் அனைவரும் கழகப் பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியின் மக்கள் நலத் திட்டங்களை இல்லந்தோறும் கொண்டு சேர்த்து முதலமைச்சரின் கரங்களை வலுப்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி மண்டல தலைவர்கள் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், பகுதி செயலாளர்கள் மேகநாதன், ரவீந்திரன், ஜெயக்குமார், ராமகிருஷ்ணன் மாமன்ற உறுப்பினர் விஜயகுமார், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் அபிராமிநாதன், மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் அருண் சுந்தர், மாநகர மகளிரணி அமைப்பாளர் ஜெயக்கனி, பகுதி மகளிரணி வளர்மதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

.