தூத்துக்குடி தமிழ்நாடு காலநிலை மாற்றம் பணி, ஐ.ஐ.ஹச்.எஸ் இந்தியன் நிறுவனம் மனித குடியிருப்புகள் ஆகிய இரு நிறுவனங்களுடன் அகில இந்திய கட்டுனர் சங்கமும் இணைந்து இன்றைய கால கட்டத்திற்கு மிகவும் அவசியமான கட்டிடங்கள்பசுமைக் கட்டிடம் என்பது தற்காலத்தில் கட்டிடத் துறையில் மிகவும் பழக்கமான ஒரு கருத்துரு ஆகும். இதுவே தாங்கும் தன்மை கொண்ட கட்டிடம் எனவும், உயர் தொழிற்பாட்டுக் கட்டிடங்கள் எனவும் குறிப்பிடப் படுகின்றன. இது சூழல் பாதுகாப்பு, மக்கள் நல்வாழ்வு என்பவற்றோடு தொடர்புடையது.அதை
எப்படி அமைய வேண்டும் என்பது சம்பந்தமாக திறன்மிகு வாழ்விடம்பற்றிய ஓருநாள் கருத்தரங்கை மாநகராட்சி ஆணையர் மதுபாலன் துவக்கி வைத்து பேசினார்.
கருந்தரங்கில் அகில இந்திய கட்டுனர் சங்கத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சோி அந்தமான் நிக்கோபர் தீவுகளின் மாநிலத்தலைவர் பழனிவேல், மாநில கிரீன் பில்டிங் கமிட்டியின் சேர்மன் சொக்கநாதன், பியோ, அகில இந்திய கட்டுநர் சங்கம் தூத்துக்குடி மையத்தலைவர் முஜாஹித்அலி, மையச்செயலாளர் மகாராஜன், முன்னாள் தலைவர்கள் உள்பட மையத்தின் உறுப்பினர்கள் சுமார் 75 பேர் கலந்து கொண்டனர்.

