தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சாத்தான்குளம், சிவகளை, செய்துங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு நலத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி, நூலகம், சுகாதார மையம் கட்டிடங்களை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
|
சாத்தான்குளம் பொத்தகாலன்விளையில் அமைந்துள்ள புனித ஜோசப் தொடக்கப்பள்ளியில், பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 36 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள பள்ளி வகுப்பறை கட்டடங்களுக்கு கனிமொழி கருணாநிதி எம்.பி, மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் முன்னிலையில் அடிக்கல் நாட்டினார். |
பின்னர் தூத்துக்குடி மாவட்டம் சிவகளையில், சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து ரூ. 35 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சுகாதார துணை மையக் கட்டடத்தை பொது மக்களின் பயன்பாட்டிற்கு கனிமொழி கருணாநிதி எம்பி, திறந்து வைத்தார்.
தொடர்ந்து ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சியில், பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 19 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்படவுள்ள நியாய விலைக் கடை கட்டடத்திற்கு கனிமொழி கருணாநிதி எம்பி, அடிக்கல் நாட்டினார்.
பின்னர் கருங்குளம் செய்துங்கநல்லூர் ஊராட்சியில், பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 15 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய நூலகத்தை திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்பி, திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தூத்துக்குடி கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) இரா.ஐஸ்வர்யா, எழுத்தாளர் முத்தலாங்குறிச்சி காமராசு, திமுக ஒன்றிய செயலாளர்கள் சாத்தை தெற்கு பாலமுருகன், வடக்கு ஜோசப், மத்திய பொன் முருகேசன், புதூர் சுப்ரமணியன், கருங்குளம் சுரேஷ் காந்தி, ராமசாமி,
பொதுக்குழு உறுப்பினர் இந்திர காசி, சொர்ண குமார், மாவட்ட பிரதிநிதி அந்தோணி ஜெயசீலன், மருத்துவர் அணி டாக்டர் அஜய், ஓட்டுனர் அணி துணை அமைப்பாளர் ரெனிஸ் மற்றும் திமுக நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
