December 1, 2025
#தூத்துக்குடி

மாதாந்திர பராமரிப்பு பணிகள்- தூத்துக்குடி மாநகரில் நாளை மின்தடை

தூத்துக்குடியில்  பல பகுதிகளில் நாளை மின்விநியோகம் இல்லை. இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தூத்துக்குடி நகர் செயற்பொறியாளர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது-:

தூத்துக்குடி:தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் தூத்துக்குடி மின் பகிர்மான வட்டம், நகர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (19.08.2025 செவ்வாய்க்கிழமை) காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெற உள்ளது.

இதன் காரணமாக போல்பேட்டை, ஆண்டாள் தெரு, சத்திரம் தெரு, 1-ம் கேட், 2-ம் கேட், மட்டக்கடை, வடக்குபீச் ரோடு, ரயில்வே ஸ்டேஷன் ரோடு, வடக்கு காட்டன் ரோடு, கிப்சன் புரம், ரங்கநாதபுரம், தெப்பக்குளம் தெரு, சிவன் கோவில் தெரு, டி.ஆர். நாயுடு தெரு, வ.உ.சி. ரோடு, ஜெயிலானி தெரு, வி.இ.ரோடு, பங்களா தெரு, பாலவிநாயகர் கோவில் தெரு, டூவிபுரம், ஜெயராஜ் ரோடு, மீனாட்சிபுரம், தாமோதர நகர், சண்முகபுரம், ஜின் பேக்டரி ரோடு, எட்டயபுரம் ரோடு, ஸ்டேட் வங்கி காலனி, கந்தசாமிபுரம், இஞ்ஞாசியார் புரம், எழில் நகர், அழகேசபுரம், திரவியபுரம், முத்துகிருஷ்ணா புரம், குறிஞ்சிநகர், அண்ணாநகர், வி.வி.டி. மெயின் ரோடு, முனியசாமிபுரம், CGE காலனி, லெவிஞ்சிபுரம், பக்கிள்புரம், லோகியாநகர், பெருமாள் புரம், போல்டன்புரம், சுப்பையாபுரம், பாளையங்கோட்டை ரோடு, சிதம்பரநகர், பிரையண்ட்நகர், தனசேகரன் நகர், முத்தம்மாள் காலனி, கே.டி.சி.நகர், ஹவுசிங் போர்டு காலனி, ஆதி பராசக்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.